14 ஆயிரம் கன அடியிலிருந்து 10 ஆயிரம் கன அடியாக குறைந்த மேட்டூர் அணை நீர்வரத்து!

மேட்டூர் அணை நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியிலிருந்து 10 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் நீர்வரத்து கடந்த சில தினங்களாக அதிக அளவில் இருந்து வந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்காக 1000 அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்ட நிலையில், 14 ஆயிரத்து 947 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து இன்று 10 ஆயிரத்து 28 கன அடியாக குறைந்துள்ளது. தற்பொழுது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.66 அடியாகவும் நீர் இருப்பு 64. 40 டிஎம்சி ஆகவும் இருக்கிறது. பாசனத் தேவைக்காக டெல்டாவுக்கு 14000 அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 900 கனஅடி நீரும் தற்போதுவரை திறந்துவிடப்பட்டுள்ளது.

author avatar
Rebekal