முலாம்பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்!

பொதுவாக பழங்கள் என்றாலே உடலுக்கு மிகவும் சத்து அளிக்கக்கூடிய இயற்கை வரம் தான். இதில் முலாம் பழம் மிகச் சிறந்த பழமாகும். அதாவது உடல் உஷ்ணத்தை குறைத்து சிறுநீர் தாரையில் ஏற்படக்கூடிய எரிச்சலை போக்கி, வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் இது மிகுந்த சத்துக்களை உடலுக்கு அளிக்கிறது. இவ்வளவு பயன் கொண்ட முலாம் பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி அறிவோம்

மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

வைட்டமின் ஏ, இரும்புசத்து, பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால் மினரல் அதிகமிருக்கிறது. நோய்களைத் தடுக்கக் கூடியது மட்டுமல்லாமல் உடலுக்கு புத்துணர்வையும் அளிக்கிறது. சிறுநீர் தாரையில் ஏற்படக்கூடிய எரிச்சலை போக்கி உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. இந்த பழத்தை தொடர்ந்து உண்டு வர மூல நோய் குணமாகி மலசிக்கல் நீங்கும். இதில் வைட்டமின் ஏ,பி, சி ஆகியவை இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். பித்தத்தை மொத்தமாகப் போக்கி, கண்ணுக்கு நல்ல பார்வை அளித்து உடல் வலுவை அதிகரிக்கும்.

author avatar
Rebekal