மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் மரகத விநாயகர் தேன் அபிஷேகம்! வழிமுறையும்.. பலனும்…

  • இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி என்பது பெற்றோர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
  •  மாணவர்களின் கல்வி பிரச்சனையை தீர்க்க மரகத விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் பிரச்சனை தீர்ந்து விடும்.

தற்போதைய காலகட்டத்தில் கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த பெற்றோர்கள் எவ்வளவோ முயன்று வருகிறார்கள். சில நேரம் மாணவர்கள் ஞாபக சக்தி குறைபாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டு அதனால் அவர்கள் கல்வியில் முன்னேற்றம் இல்லாமல் மந்தமாக காணப் படுகிறார்கள்.

இந்த பிரச்சனை பெற்றோர்களுக்கு மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. மாணவர்களின் ஞாபக சக்தியை மீட்டு அவர்களின் கல்வித் திறன் மேம்படும் வகையில் திகழ மரகத விநாயகருக்கு தேன் அபிஷேகம்  செய்தால் போதும். அந்த வழிபாட்டை எவ்வாறு செய்வது என தற்போது பார்க்கலாம்.

எந்த ஒரு விஷயத்துக்கும் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்டு அந்த செயலை தொடங்கினால் அந்த செயல் வெற்றியில் முடியும். எப்படிப்பட்ட தோஷத்தையும் நீக்கும் சக்தி விநாயகருக்கு கொண்டு பச்சை நிறத்தில் உள்ள மரகத  விநாயகரை நம் வீட்டில் வாங்கி வைத்து அவருக்கு சுத்தமான மலை தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். அப்படி அபிஷேகம் செய்யப்பட்ட தேனை சேகரித்து வைத்து அந்த தேனை துளசி இலையில் எடுத்து, வில்வ இலையின் மீது வைத்து அதனை குலைத்து உங்கள் பிள்ளைகளின் நாவில் தினந்தோறும் தடவி வர வேண்டும்.

இந்த மலைதேன் துளசி வில்வ இலை இவை பிள்ளைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் மருத்துவ குணம் கொண்டது. அதிலும் விநாயகருக்கு அபிஷேகம் செய்த தேன் தெய்வீக சக்தி கொண்டது. இவ்வாறு பூஜை செய்ய முடியாதவர்கள் அருகில் உள்ள பழமையான சிவன் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள லிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்து அந்த தேனை சேகரித்து மேற்கண்டவாறு செய்து பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.

இதன் மூலம் உங்கள் பிள்ளைகளின் கல்வி தோஷம் நீங்கும். அவர்கள் தங்களை அறியாமலேயே படிப்பில் ஆர்வத்தோடு ஈடுபடுவதை நீங்கள் உணரமுடியும். பிள்ளைகளின் கல்வி பற்றிய கவலை நீங்கி  பெற்றோர்கள் நிம்மதி அடையலாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.