ஒரு பக்கம் சர்ச்சை…மறுபக்கம் ரூ.300 கோடி! த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பாட்…

ஒரு பக்கம் சர்ச்சை…மறுபக்கம் ரூ.300 கோடி! த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பாட்…

Trisha

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை கூறிய கருத்துக்களால் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இந்த சர்ச்சை சமூக வலைத்தளங்கில் வைரலாக பேசப்பட்டு வரும் நிலையில், த்ரிஷா மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட புதிய பான் இந்தியன் திரைப்படத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக உள்ளதாம். இது ஒரு சரித்திர படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்திற்காக நடிகை த்ரிஷா ரூ.12 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் திரிவிக்ரம் இயக்கவுள்ளதாகவும், தெலுங்கில் மாஸ் ஹீரோவான அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க தான் ஒப்பந்தமாகி உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

மன்சூர் அலிகான் சர்ச்சைக்கு மத்தியில் தெலுங்கில் கிடைத்த இந்த மாபெரும் வாய்ப்பை த்ரிஷாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுமட்டுமின்றி நடிகை த்ரிஷாவுக்கு பாலிவுட்டில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு அடுத்த சிக்கல்…நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ்?

சமீபத்தில், சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா நடிகையாக நடித்து வருகிறார் திரிஷா.

மன்சூர் அலிகான் சர்ச்சை

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சைக்கு, அவர் மீது 2 பிரிவுகள் கீழ் சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், மன்சூர் அலிகான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாக அழைத்து விசாரிக்க சென்னை ஆயிரம் விளக்கு போலீசார், 41a எனப்படும் நோட்டீஸ்-ஐ அனுப்பியுள்ளது.

மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு…விஜய்யை விட சிறந்த நடிகர் வேணுமா? – சீமான் கருத்து.!

முன்னதாக, த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் இப்படி பேசியதற்கு லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், மஞ்சிமா மோகன், மாளவிகா மோகனன், சின்மயி, குஷ்பூ என பல பிரபலங்கள்  தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.

Join our channel google news Youtube