ரூ.10 ஆயிரத்திற்கு விஷப்பாம்பு வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன் கைது.!

ரூ.10 ஆயிரத்திற்கு விஷப்பாம்பு வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன் கைது.!

நகைக்கு ஆசைப்பட்டு கேரளாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விஷப்பாம்பு வாங்கி கடிக்க விட்டு மனைவியைக் கொன்றவர் கைது.

கேரளா பத்தனம்திட்டை மாவட்டத்தை சேர்ந்த சூரஜ் மற்றும் அவரது மனைவி உத்ரா இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த மார்ச் மாதம் உத்ராவை திடீரென பாம்பு கடித்திருந்தது. பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் அவரது தாய் வீட்டில் ஓய்வெடுத்தார். இதையடுத்து, கடந்த 6 ஆம் தேதி இரவு மனைவியை பார்ப்பதற்காக சூரஜ் அங்கு சென்றார். அன்று இரவு மனைவியின் வீட்டிலேயே தங்கினார்.

இதனைத்தொடர்ந்து மறுநாள் காலை உத்ரா நீண்ட நேரமாக தூங்கி கொண்டிருப்பதை கண்டு தயார் அவரை எழுப்ப முயன்றார். அப்போது அசைவின்றி இருந்த உத்ராவை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் பாம்பு கடித்து உயிரிழந்ததாக தெரிவித்தனர். ஆனால், உத்ராவின் இறப்பில் சந்தேகம்பட்ட பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, காவல்துறை விசாரணையை மேற்கொண்டனர். உத்ரா இறந்த பின்பு கணவர் சூரஜின் நடவடிக்கையில் சில மாற்றத்தை கண்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். 

இதில், சூரஜ் மனைவியின் நகைக்காக அவர் மீது பாம்பை கடிக்க விட்டு கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. இதனிடையே சூரஜ், மனைவிக்கு தெரியாமல் பேங் லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து செலவு செய்துள்ளார். இதனை உத்ரா, கணவரிடம் கேட்டதால் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனைவியை கொலை செய்ய சூரஜ் திட்டமிட்டுள்ளார். இதற்காக ரூ.10,000 கொடுத்து மீண்டும் ஒரு பாம்பை விலைக்கு வாங்கி, உத்ராவை பார்க்க போகும்போது ஒரு பையில் பாம்பையும் எடுத்து சென்றுள்ளார்.

உத்ரா தூங்கிய பின்பு அவர் மீது பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்தார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சூரஜ் மற்றும் பாம்பு விற்பனை செய்தவரும் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube