ஒவ்வொரு காட்சியும் ‘மிரட்டல்’ தான்! கங்குவா அப்டேட் விட்ட பிரபலம்!

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானி நடிக்கிறார். படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிகிறது படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், படத்தில் பாடல்களை எழுதி இருக்கும் பாடலாசிரியர் மதன் கார்க்கி கங்குவா படம் பற்றிய சில விஷயங்களை பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” கங்குவா திரைப்படம் அருமையாக வந்துகொண்டு இருக்கிறது. படத்தின் பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது.

இதுவரை நான் படத்தில் சில காட்சிகளை பார்த்தேன். பார்த்து மிரண்டே போய்விட்டேன் அந்த அளவிற்கு சண்டை காட்சிகள் எல்லா பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருக்கிறது. சூர்யாவின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா அவதார் படம் போல புது உலகத்தை வைத்து எடுத்து இருக்கிறார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஹீரோயின் அழகா இல்லையா? கொந்தளித்த கார்த்திக் சுப்புராஜ்!

அவருடைய ஸ்டைலில் புதிதாக உருவாக்கியுள்ள அந்த உலகத்தில் புதிய கடவுள், புதிய கலாச்சாரம் என சில விஷயங்களை சேர்த்து இருக்கிறார். படம் நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு புரியும். இந்த திரைப்படத்தில் வரும் வரலாற்று காட்சிகள் ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது. அந்த அளவிற்கு பழமையானதை பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கும் வகையில் கங்குவா படக்குழு எடுத்துள்ளது.

படம் 10 மொழிகளில் எடுக்கப்பட்டு வருவதால் நாங்கள் பணியாற்றிய மற்ற மொழி உரையாடல் எழுத்தாளர்கள் அனைவரும் படத்தைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர். அவர்களும் படத்தின் சில காட்சிகளை பார்த்துவிட்டு படம் பயங்கரமாக வரப்போவதாக கூறினார்கள்” எனவும் பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறியுள்ளார். இவர் படத்தை பற்றி இப்படி பேசியுள்ளது படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. மேலும், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை இருந்தாலும், படம் அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் 11 -ஆம் தேதி 10 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.