கால்பந்தை பெருமைப்படுத்தும் லக்னோ அணி! கடைசி லீக் போட்டியில் நடக்கும் சுவாரஸ்யம்..!

கால்பந்தை பெருமைப்படுத்தும் லக்னோ அணி! கடைசி லீக் போட்டியில் நடக்கும் சுவாரஸ்யம்..!

Lucknow Super Giants

கால்பந்து கிளப் அணியான மோஹன் பகான் அணியின் பெருமை சேர்க்கும் வகையில் பிரத்யேக ஜெர்சியில் லக்னோ அணி விளையாட உள்ளது.

நடப்பாண்டு 16-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இறுதி கட்டடத்தை எட்டி வருகிறது. தற்போது வரை யார் முதல் 4 இடத்தை பிடிப்பார்கள் என கடுமையான போட்டி நிலவி வருகிறது. இருப்பினும், முதலிடத்தை பிடித்து, இந்தாண்டு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்றது.

மற்ற 3 இடங்களுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. அதுவும் ஒரு சில போட்டிகளை தண்டி விட்டால் யார் அந்த மற்ற மூன்று அணிகள் என தெரிந்துவிடும். இந்த சமயத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல்வேறு சுவாரஸ்யங்கள் நடந்து வருகிறது. அதில், தற்போது கால்பந்தை பெருமைப்படுத்தும் விதமாக லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி, ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை செய்யவுள்ளது.

வரும் 20-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி, கால்பந்து கிளப் அணியான மோஹன் பகான் (MohunBaganFC) அணியின் ஜெர்சியை பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த பிரத்யேக ஜெர்சியில் விளையாட உள்ளதாக அணியின் நிர்வாகம் என அறிவித்துள்ளது.

நடப்பு ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சாம்பியன் படத்தை வென்ற “Mohun Bagan FC” அணியை பெருமைப்படுத்தும் விதமாக, இவ்விரு அணிகளின் நிறுவரான சஞ்சீவ் கோயங்கா இவ்வாறு முடிவெடுத்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மோஹன் பகான் கால்பந்தாட்ட அணியின் உரிமையாளராக ஆர்பிஎஸ்ஜி குழும தலைவர் சஞ்சீவ் கோயங்கா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தான் சிறப்பு ஜெர்சியை அணிந்து லக்னோ அணி விளையாடுகிறது. இதே சமயத்தில் மோஹன் பகான் அணி கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. மேலும், தற்போது ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஏடிகே மோஹன் பகான் என அறியப்படும் கால்பந்து அணி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் ‘மோஹன் பகான் சூப்பர் ஜெயண்ட்’ என மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube