வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு!

வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றம் இல்லை.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.36 குறைந்துள்ளது. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.36 குறைந்து, ரூ.2,009க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2,045 ஆகி இருந்த நிலையில், தற்போது 36 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் எதுவும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. வீடு உபயோக பயன்பாட்டிற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,068.50க்கு விற்பனையாகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment