4 வருடங்களுக்கு பிறகு சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் ‘காதல்’ சந்தியா.!

4 வருடங்களுக்கு பிறகு சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் ‘காதல்’ சந்தியா.!

Default Image

நடிகை சந்தியா சுமார் 4 வருடங்களுக்கு பிறகு சன்டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி என்ற தொடரின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

நடிகர் பரத்துடன் காதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சந்தியா. அதனையடுத்து டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும், பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதனையடுத்து 2015ல் வெங்கட் சந்திரசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சந்தியாவிற்கு ஷேமா வெங்கட் என்ற பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்த விட்டு , கடந்த 4 ஆண்டுகளாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கண்மணி’ என்ற சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த தொடரில் பூர்ணிமா பாக்கியராஜ், சஞ்சீவ், லீஷா, சாம்பவி குருமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்த தொடரில் சந்தியா கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். அதற்கான புரோமோ வீடியோவை சன்டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Join our channel google news Youtube