linux-ல் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள்!!!


நன்மைகள் :

linux os-ஐ அதிக நபர்கள் விரும்புவதற்கு முதல் காரணம் இதுவொரு open source  இலவச os . இந்த ஓஎஸ்க்காக வாடிக்கையாளர்கள் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் சட்டரீதியாக இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.டவுண்லோடு செய்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே source code எண் வழங்கப்படும். மேலும் விண்டோஸ் ஓஎஸ்-ஐ விட இதை install   செய்வதும் மிக எளிது.
லீனக்ஸ் ஓஎஸ் குறித்து எந்த சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக இண்டர்நெட் மூலம் உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் சந்தேகங்களை லீனக்ஸ் நிருவனம்   செய்து தரும் வகையில் உள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு நட்பான தொடர்பாக உள்ளது.
லீனக்ஸில் உள்ள மற்றொரு சிறப்பு அம்சம் என்னவெனில் உங்கள் கம்ப்யூட்டரின் பாதுகாப்பு. லீனக்ஸ் ஓஎஸ் உள்ள கம்ப்யூட்டரில் அவ்வளவு எளிதில் மால்வேர் உள்ளே நுழைந்துவிட முடியாது. விண்டோஸ் ஓஎஸ் போல் எந்த ஒரு சிங்கிள் வைரஸையும் லீனக்ஸ் அனுமதிக்காது என்பது இதன் கூடுதல் சிறப்பு.
லீனக்ஸ் ஓஎஸ் பலவிதங்களில் கிடைத்தாலும் ஒரு முழு லீனக்ஸ் ஓஎஸ் அதிகபட்சமாக உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து 2GB மெமரியை மட்டுமே எடுத்து கொள்ளும் சிறிய அளவிலான ஓஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

தீமைகள்:

மைக்ரோசாப்ட் விண்டோஸ் உபயோகித்தவர்கள் லீனக்ஸ் கம்ப்யூட்டருக்கு வந்தால் அவர்களுக்கு லீனக்ஸ் இணக்கத்தன்மையுடன் இருக்காது. குறிப்பாக மைக்ரோசாப்ட் வேர்டுக்கு மாற்றை இதில் கண்டுபிடிப்பது கடினம், மேலும் இந்த ஓஎஸ் இருந்தால் கேம்ஸ் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
linux os  பயன்படுத்தும் முன்னர் அது குறித்த தகவல்களை தெரிந்துக்கொள்ள வேண்டும். விண்டோஸ் மாதிரி ஓஎஸ் போட்டவுடன் உங்களால் செயல்பட முடியாது. ஒருசில விஷயங்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
author avatar
Castro Murugan

Leave a Comment