முதல்வர் அறிவித்த மளிகை கடை, பெட்ரோல் பல்க் உள்ளிட்டவைகளுக்கான நேர கட்டுப்பாடு இன்று முதல் அமல்.!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ம்ருர்த்துவமனைகளும்,  மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும், பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

மேலும் Swiggy, Zomato, Uber Eats போன்ற உணவு விநியோக செய்யும் நிறுவனங்களும் காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் – 2.30 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டது இன்று முதல் செயல்பாட்டிற்கு வரவுள்ளது

மருந்தகங்கள், உணவகங்கள் வழக்கம் போல இயங்கலாம் எனவும், உணவகங்கள் உணவு பார்சல் வழங்க மட்டுமே அனுமதி எனவும் முதல்வர் அறிவித்தது செயல்பாட்டில் உள்ளது. 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.