உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ்..! வாங்க பார்க்கலாம்..!
பொதுவாகவே நமது குழந்தைகள் மாலை நேரத்தில் தேநீருடன் எதாவது நொறுக்குத்தீனி சாப்பிட ஆசைப்படுவதுண்டு. அப்படி நாம் அவர்களுக்கு தேவையான உணவை கடைகளில் வாங்கி கொடுப்பது உண்டு. தற்போது இந்த பதிவில் நாம் வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான இனிப்பு பலகாரம் பற்றி பார்ப்போம்.
தேவையானவை
மைதா மாவு – 2 கப்
சுகர் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 கரண்டி
சுகர் சிரப்
தண்ணீர் – தேவையான அளவு
சீனி – ஒரு கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பவுலில் மைதா மாவு, சுகர் பவுடர், உப்பு, நெய் ஆகிய நான்கையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு சுகர் சிரப் தயார் செய்ய வேண்டும்.
சுகர் சிரப் தயார் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கப் சீனி கலந்து சிறிதளவு ஏலக்காய் தூள் கலந்து தயார் செய்து கொள்ள வேண்டும். பின் பிசைந்து வைத்துள்ள மாவை ஐந்து உருண்டைகளாக பிடித்து, அதனை புராட்டாவிற்கு பிசைவது போல தட்டி, தட்டையாக உருட்டி சிறுசிறு துண்டுகளாக வெட்டி பின் அதனை பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பொறுத்தவரை சுகர் சிறப்பில் சிறிது நேரம் ஊற வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.