இளைய தலைமுறையினரே! இளநரை குறித்த கவலைய விடுங்க! உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சருமம் மற்றும் கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகள் தான். இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இளம் தலைமுறையினர், பலரும் செயற்கையான மருத்துவ முறைகளை தான் பின்பற்றுகின்றனர். இதனால் அவர்கள் சந்திக்கிற பக்கவிளைவுகள் அதிகம். எனவே எந்த ஒரு பிரச்சனைக்கும் இயற்கையான முறையில் தீர்வுகாண முயற்சிப்பது சிறந்தது.
தற்போது இந்த பதிவில் இளம் நரையை இயற்கையான முறையில் போக்குவதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- மருதாணி இலை (அரைத்தது) – ஒரு கைப்பிடி அளவு
- எலுமிச்சை சாறு – 3 ஸ்பூன்
- வெந்தய பவுடர் – இரண்டு ஸ்பூன்
செய்முறை
முதலில் மருதாணி இலையை நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கலவையுடன் எலுமிச்சை சாறு, வெந்தய பவுடர் இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முதல் நாள் இரவே தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் காலையில் எழுந்ததும், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு, நன்கு அலசிக் கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை முடிகளில் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பின் சீகைக் காய் தூள் தேய்த்து தலையை தண்ணீரில் அலச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலனை பார்க்கலாம்.