ரோட்டு கடை பட்டாணி சுண்டல் மசாலா இனிமே வீட்டிலேயே செய்யலாம்.!
Pea recipe- ரோட்டு கடை ஸ்டைலில் பட்டாணி சுண்டல் மசாலா செய்வது எப்படி என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- பட்டாணி= 200 கிராம்
- தக்காளி =2
- வெங்காயம்= 4
- பூண்டு =5 பள்ளு
- இஞ்சி=2 இன்ச்
- பச்சை மிளகாய் =1
- கேரட்= இரண்டு
- மஞ்சள் தூள்= 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா= ஒரு ஸ்பூன்
- சாம்பார் தூள்= ஒரு ஸ்பூன்
- கொத்தமல்லி இலைகள்= சிறிதளவு
- எண்ணெய் = நான்கு ஸ்பூன்
செய்முறை:
முதலில் பட்டாணியை எட்டு மணி நேரம் ஊற வைத்து நன்கு வேக வைத்து கொள்ளவும். பிறகு தக்காளி ,2 வெங்காயம், இஞ்சி ,பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை பச்சையாகவே அரைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.
அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, சாம்பார் தூள் சிறிதளவு உப்பு சேர்த்து கிளறவும்.பிறகு வேக வைத்த பட்டாணி தண்ணீரையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். ஓரளவுக்கு கெட்டி படத்திற்கு வந்ததும் பட்டாணி சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இப்போது கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு நிமிடம் கலந்து விட்டு இறக்கவும்.இறக்கிய பிறகு பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் மற்றும் துருவிய கேரட்டை சேர்த்துக் கொள்ளவும். இப்போது சுவையான ரோட்டு கடை பட்டாணி சுண்டல் மசாலா தயார்.