ஹோட்டல் சுவையில் நூடுல்ஸ் இனி வீட்டிலேயே செய்யலாம்.!
Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்கள்:
- நூடுல்ஸ் =150 கிராம்
- எண்ணெய் =5 ஸ்பூன்
காய்கறிகள்
- கேரட் =1 கைப்பிடி
- குடை மிளகாய் =1
- வெங்காயம் =2
- முட்டைகோஸ் =1 கைப்பிடி
- பச்சைமிளகாய் =2
- இஞ்சி =1 தூண்டு
- பூண்டு =1 கைப்பிடி
மசாலா பொடிகள்
- மிளகாய் தூள் =1 ஸ்பூன்
- மிளகு தூள் =1 ஸ்பூன்
- நூடுல்ஸ் மசாலா =1 ஸ்பூன்
- கரம் மசாலா =1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் =அரை ஸ்பூன்
சாஸ் வகைகள்
- டொமெட்டோ கிட்சப் =2 ஸ்பூன்
- சில்லி சாஸ் =2 ஸ்பூன்
- சோயா சாஸ் =1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் இரண்டு லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். பின்பு அதிலே நூடுல்ஸை சேர்த்து எண்பது சதவீதம் வேக வைத்துக் கொள்ளவும். நூடுல்ஸ் வெந்த பிறகு அதை குளிர்ந்த நீரில் போட்டு எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு ,பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதிலே கேரட் ,வெங்காயம், முட்டைக்கோஸ் குடமிளகாய், சேர்த்து முக்கால் பதம் வேக வைக்கவும். பிறகு அதில் கரம் மசாலா, நூடுல்ஸ் மசாலா, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிடவும் .
அதன் மசாலா வாசனை போன பிறகு டொமேட்டோ கிட்சப், சில்லி சாஸ், சோயா சாஸ் ஆகியவற்றையும் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு கலந்து விடவும் பிறகு அதிலே ஆற வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து நன்கு மசாலாக்கள் படும்படி கிளறிவிட்டு இறக்கினால் ஹோட்டல் சுவையில் நூடுல்ஸ் தயார்.