வீட்டுலயே அசத்தலான மைசூர்பாகு செய்யலாம்…! வாங்க எப்படினு பார்ப்போம்..!
நம்மில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே மைசூர் பாகு என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. அதே சமயம் நமது வீடுகளில் பலகாரம் செய்தாலும் அதில் மைசூர் பாகு இடம் பெறுவது உண்டு. ஆனால், நம்மில் பெரும்பாலானோர் மைசூர் பாகை வீட்டில் செய்யாமல் கடைகளில் வாங்குவது உண்டு.
தற்போது இந்த பதிவில், சுவையான மைசூர் பாகு வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்ப்போம் .
தேவையானவை
- கடலைமாவு – 2 கப்
- நெய் – தேவையான அளவு
- சீனி – 2 கப்
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் கடலை மாவு எடுத்து கொள்ள வேண்டும். அந்த மாவை அடி கனமான பாத்திரத்தில், பாத்திரம் சூடேறிய பின்பு கடலைமாவை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்பு வறுத்து எடுத்த மாவை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் சீனி மற்றும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி சீனி பாகு செய்து கொள்ள வேண்டும். அந்த சீனி பாகு ஒரு கம்பி பதம் அளவுக்கு வரும் வரை நன்கு கொதிக்கவிட்டு இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு வறுத்து வைத்துள்ள கோதுமை மாவில் நெய்யை சேர்த்து நெய் சேர்த்து மாவு தோசை மாவை விட சற்று கெட்டியான பதத்திற்கு வரும் வரை நெய் சேர்த்து கிளற வேண்டும். அதன் பின்பு சீனி பாகு, நெய் மற்றும் கடலை மாவு கலவையை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
அது அல்வா பதத்திற்கு வந்த பின்பு அடுப்பிலிருந்து இறக்கி கொள்ள வேண்டும். பின் மேலும் சிறிதளவு நெய் சேர்த்து ஒரு தட்டில் நெய் தடவி, நாம் தயார் செய்து வைத்துள்ள மைசூர் பாகு கலவையை தட்டில் ஊற்றி 30 நிமிடங்கள் காயவைத்து வைத்த பின்பு துண்டு துண்டுகளாக வெட்டி எடுத்து பரிமாற வேண்டும். இப்போது சுவையான மைசூர்பாகு தயார்.