‘வீட்டுலயே செய்யலாம்’ – உடல் எடையை குறைக்கும் அதிசய பானங்கள்..!

Published by
லீனா

இன்று பெரும்பாலானோருக்கு உடல் பருமன் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் பல பாதிப்புகளை சந்திக்கின்றனர். உடல் ரீதியாக பார்க்கும் போது, சுறுசுறுப்பாக வேலை செய்ய, ஏற்ற நேரத்தில் வேலையை முடிப்பது போன்ற சிக்கல்கள் காணப்படும். உடல் பருமன் காரணமாக உடல் ஆரோக்கியத்திலும் சில பாதிப்புகள் ஏற்படும்.

அதே சமயம் வெளியில் செல்லும் போதோ, நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உருவ கேலிக்கு ஆளாகும் போது, அவர்கள் மன ரீதியாகவும் பாதிப்புக்குளாகின்றனர். தற்போது இந்த பதிவில் உடல் எடையை குறைக்க  கூடிய  பானங்கள் பற்றி பார்ப்போம்.

இந்த பதிவில் உடல் எடையை குறைக்க கூடிய 3 பானங்கள் பற்றி பார்ப்போம். இந்த பானங்கள் தயாரிக்க பெரிய அளவில் செலவு செய்யவேண்டிய அவசியம் இல்லை. இந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அப்படி குடிக்க இயலாதவர்கள் சாப்பிட்ட பின் 2 மணி நேரத்திற்கு பின்பு குடிக்கலாம்.

பானம் 1

தேவையானவை 

  • இஞ்சி
  • எலுமிச்சை
  • பெருங்காயம்
  • உப்பு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தில் 200 மிலி தண்ணீரில், இஞ்சி சிறிய துண்டு , எலுமிச்சை சாறு சிறிதளவு, பெருங்காயம் பாதி கலந்து, அதனை கொதிக்க வைத்து, இறக்கிய பின் உப்பு தேவையான அளவு  கலந்து சுட சுட அருந்த வேண்டும்.

பானம் 2

தேவையானவை 

  • இஞ்சி
  • மிளகு
  • துளசி
  • தேன்

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தில் 200 மிலி தண்ணீரில், இஞ்சி சிறிய துண்டு, மிளகு 6, துளசி இலைகள் 5 முதல் 6 இலைகளை போட்டு கொதிக்க வைத்து இறக்கி, இறுதியாக தேவையான அளவு தேன் கலந்து பருக வேண்டும்.

பானம் 3

தேவையானவை 

  • இஞ்சி
  • மிளகு
  • வெற்றிலை
  • தேன்

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தில் 200 மிலி தண்ணீரில், இஞ்சி சிறிய துண்டு, மிளகு 6, வெற்றிலை இலைகள் 3 ஆகியவற்றை போட்டு கொதிக்க வைத்து இறக்கி, இறுதியாக தேவையான அளவு தேன் கலந்து பருக வேண்டும்.

பயன்கள் 

இந்த 3 பானங்களிலும் பொதுவாக ஜின்ஜிரால் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியதாக உள்ளது. இது இதயம் சம்பந்தமான பிரச்சனைகள், கொலஸ்ட்ராலை குறைக்கிறது. சர்க்கரை அளவை குறைக்கிறது, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. எனவே இந்த பானத்தை வாரத்திற்கு 3 முறையாவது குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

Published by
லீனா

Recent Posts

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…

20 minutes ago

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…

55 minutes ago

பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…

2 hours ago

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

17 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

18 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

21 hours ago