சமூக வலைத்தளங்களில் அதிகமாக உலாவுபவரா நீங்கள்! அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு!
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே சமூக வலைதளம் அடிமையாக்கி வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆண்கள், பெண்கள் அனைவருமே இரவு பகல் பாராமல் தூக்கமின்றி சமூக வலைத்தளங்களுடன் இணைந்துள்ளனர்.
தூக்கம் இன்றி உலாவுதல்
சமூக வலைத்தளங்களை தூங்கும் போதும் பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து விஞ்ஞானிகளின் ஆய்வுபடி ரூ மனிதன் ஒரு நாளைக்கு இடைவெளி இல்லாமல், 6 மாநி நேரம் தொடர்ந்து தூங்க வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தி, மனநிலை, மூளை செயல்பாடு ஆகியவற்றிற்கு உதவுகிறது. இவ்வாறு நாம் செய்யாத பட்சத்தில், நமது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இறப்பு செய்திகள்
இன்று சமூக வலைத்தளங்கள்,யாராவது இந்த forward செய்யுங்கள் என தகவல் அனுப்பியவுடன் அதன் உண்மை தன்மையை அறியாமல், அதை நாம் forward செய்கிறோம். இது மிகவும் தவறான காரியம்.
ஏதாவது நிகழ்ச்சிகள் அல்லது இறப்பு செய்திகள் வரும் பொது அவற்றை நாம் உடனடியாக பகிரலாம்,அதன் உண்மை தன்மையை அறிந்து பண்பாடுத்த வேண்டும்.
குழந்தைகள்
இன்று குழந்தைளுக்கு கூட ஸ்மார்ட் போனை எவ்வாறு பயன்படுத்துவது என்று மிக தெளிவாக தெரிகிறது. இந்நிலையில், குழந்தைகளிடம் நாம் போனை கொடுக்கும் போனை flightmode-ல் போட்டு தான் கொடுக்க வேண்டும்.
இளைஞர்கள்
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உள்ள சில பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முகநூல் பக்கத்தை உபயோகிக்கின்றனர். இவ்வாறு உபயோகிக்கும் போது, அவர்கள் அத்தானை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.