உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சரியென நினைத்து செய்யும் தவறான செயல்கள்!
நம்மில் பலரும் மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக, பல காரியங்களை நாமும் செய்வதுண்டு. ஆனால், அந்த செயல் சரியானதா? அல்லது தவறானதா? என ஆராய்ந்து செய்வது இல்லை.
நம்மில் பலரும் மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக, பல காரியங்களை நாமும் செய்வதுண்டு. ஆனால், அந்த செயல் சரியானதா? அல்லது தவறானதா? என ஆராய்ந்து செய்வது இல்லை. இவ்வாறு செய்யும் பட்சத்தில், நாம் பல பின் விளைவுகளை கூட சந்திக்க நேரிடுகிறது. தற்போது இந்த பதிவில், நாம் நமது வாழ்வில், இது ஆரோக்கியமானது, சரியானது என நினைத்து செய்யும் தவறான செயல்கள் என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்.
தினமும் நிறைய தண்ணீர் குடிங்க
பொதுவாக ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், அதைவிட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு குடிப்பது நல்லது என நினைத்து, தாகம் எடுக்காமல் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால், உடல் பருமன், உப்பிசம், செரிமான பிரச்சனைகள் மற்றும் சரும ஆகியவற்றை சந்திக்க நேரிடும்.
மினரல் தண்ணீர்
பொதுவாக நாம் வெளி பயணங்கள் மேற்கொள்ளும் போது, ஹோட்டல்களில் உட்கொள்ளும் போதும், அதிகமானோர் மினரல் வாட்டர் தான் குடிக்கிறோம். ஆனால், இந்த பாட்டில் தண்ணீரில் புளூரைடு இருக்காது. எனவே , நமது பற்களின் ஆரோக்கியம் கேட்டு போவதோடு, சொத்தை பற்களும் ஏற்படுகிறது.
அதிகப்படியான உறக்கம்
சிலர் வாரம் முழுவதும், வேலை வேலை என அலைந்து,வார இறுதியில் விடுமுறையில்,குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல், 2 நாட்களும் தூக்கத்திற்காக நேரம் செலவிடுவதுண்டு. ஆனால், அவ்வாறு அளவுக்கு மிஞ்சின உறக்கமும் நமது உடலில் பல ஆரோக்கிய கேடுகள் ஏற்படுத்தக் கூடும்.
ஊட்டச்சத்து மாத்திரைகள்
நம்மில் பலர் நமது உடல் மேம்படுத்துவதற்காக மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக, தினமும் ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால் அவ்வாறு செய்வது தவறு. நமது உடலுக்கு எப்படிப்பட்ட ஊட்டச்சத்து மாத்திரைகள் தேவை, அதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்பு தான் உபயோகிக்க வேண்டும்.