அடடே!முகத்தில் உள்ள குழிகள் மறைய இந்த பொருள் போதுமா?
Open pores-முகத்தில் உள்ள முகப்பருக்கள் நாளடைவில் மறைந்து குழியாக மாறி நம் அழகையே கெடுத்து விடும், இதனால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை கொடுக்கும். இதை வீட்டிலேயே இருக்கும் பொருளை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
கடுக்காய்:
இது ஆயுர்வேதத்தின் ராஜா எனக் கூறப்படுகிறது கடுக்காயின் மருத்துவ குணம் ஏராளம் .இந்த கடுக்காயை நாம் முகத்தில் பயன்படுத்தினால் முகச்சுருக்கம் முகப்பரு ,கருவளையம், பிக்மென்டேஷன் போன்றவைகளுக்கும் சிறந்த மருந்தாக உள்ளது.
ஒரு கடுக்காயை உடைத்து அதை அரை கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து கால் கிளாஸ் ஆக வரும் வரை கொதிக்க விடவும். பிறகு அதை வடிகட்டி அந்த தண்ணீரில் தேவையான அளவு முல்தானிமட்டி சேர்த்து பேஸ்ட் ஆக தயார் செய்து முகத்திலே தடவவும்.
இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதற்கு முன்பே முகத்தை நன்கு சோப் அல்லது ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவி கொள்ளவும். பிறகு இந்த கடுக்காயை முகத்தில் போட்டு 20 நிமிடம் கழித்து வெறும் தண்ணீரை மட்டும் வைத்து முகத்தை கழுவி விடவும். இதன் பிறகு கெமிக்கல் கலந்த எந்த பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தவும்.
தினமும் போட்டால் சருமம் வறண்டு போக வாய்ப்புள்ளது. எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இந்தக் குறிப்பு மிக பயனுள்ளதாக இருக்கும். இதை தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம் ஏனென்றால் நாம் இயற்கையான முறையில் செய்கிறோம் என்பதினால் காலம் எடுத்துக் கொள்ளும் மேலும் நம் முகத்தில் உள்ள துளைகளின் தன்மையை பொறுத்து மறையும்.
முட்டை:
நம் முகத்திற்கு எந்த ஒரு பேஸ் பேக்கை போடும்போதும் முகத்தை சோப் அல்லது ஃபேஸ் வாஷ் வைத்து கழுவிக் கொள்ளவும், அப்போதுதான் அது நமக்கு முழு பலனையும் கொடுக்கும்.
முட்டையின் வெள்ளை கருவை உங்கள் முகத்திற்கு ஏற்ற அளவு எடுத்து தடவி காய்ந்த பின் முகம் இருக ஆரம்பிக்கும், அப்போது முகத்தை வெறும் தண்ணீரில் கழுவி விடவும்இதன்பிறகு எந்த ஒரு கெமிக்கல் கலந்த க்ரீம் சோப்பு பயன்படுத்தக் கூடாது.
அதாவது எந்த ஒரு ஃபேஸ் பேக்கை பயன்படுத்திய பின் இரண்டு மணி நேரத்துக்காவது சோப்பு மற்றும் கெமிக்கல் கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இந்த குறிப்பை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தி வரலாம். இது குழிகளை மட்டும் மறைய செய்வதோடு முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் தடுக்கும் .
வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை பேஸ்டாக அரைத்து முகத்தில் தடவி வந்தால் குழிகள் மறைந்து முகம் பளிச்சென்று காணப்படும். இது ஒரு சிலருக்கு சளி தொந்தரவை ஏற்படுத்தும்.
ஆகவே முகப்பரு, எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்தினால் உங்கள் சருமம் பட்டுப்போல பளபளவென ஜொலிக்கும் .