அடடே !குறைந்த செலவில் சட்டென ஒரு ஸ்னாக்ஸா ..!
கார கடலை – நம் அனைவரது சமையலறையிலும் உள்ள ஒரு முக்கியமான உணவுப்பொருள் கடலைப்பருப்பு. இந்த கடலைப் பருப்பைக் கொண்டு பருப்பு வடை செய்யவும் பல வகை தாளிப்புகளிலேயே பயன்படுகிறது. அது மட்டுமில்லாமல் சரும பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய பொருளாக இந்த கடலைப்பருப்பு உள்ளது. இந்த கடலைப் பருப்பை வைத்து மொறு மொறுவென காரக்கடலை செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கடலை பருப்பு =250 கி
- பூண்டு =10 பள்ளு
- எண்ணெய் =தேவையான அளவு
- பெருங்காயம் =அரா ஸ்பூன்
- கறிவேப்பிலை =சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- மிளகாய் தூள் =1 ஸ்பூன்
செய்முறை
கடலைப்பருப்பை கழுவி இரண்டு மணி நேரம் ஊரை வைத்து வடிகட்டி நிழலில் உலர்த்தி காய வைக்க வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான எண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பை சல்லடை கரண்டியில் பொரித்து எடுக்க வேண்டும், இது மிகவும் எளிதாகவும் எடுப்பதற்கு சுலபமாகவும் அனைத்து பகுதிகளும் சமமாக வெந்து வரும். ஆகவே இந்த முறையை பயன்படுத்தி பொரித்து எடுத்து வைக்கவும்.
பிறகு அதே சல்லடையில் பூண்டை தோல் நீக்காமல் தட்டி பொரித்து எடுத்து அந்த கடலை பருப்பிலே சேர்க்கவும். திரும்பவும் அதே சல்லடையில் கருவேப்பிலையும் பொரித்து எடுத்து கடலைப்பருப்பில் சேர்க்கவும். கடலைப்பருப்புக்கு தேவையான உப்பும் ,உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூளும், பெருங்காயத்தூளும் சேர்த்து கிளறி விடவும் .இப்போது சுவையான மொறு மொறுவென காரக்கடலை பருப்பு ரெடி.
நன்மைகள்
வளரும் குழந்தைகளுக்கு கடலைப்பருப்பு தினமும் ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சேர்த்து வந்தால் பல நோய்கள் நம்மை நெருங்காது. வளரிளம் குழந்தைகளுக்கு தசை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும் ,மேலும் மயக்கம், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் படிப்படியாக குறையும். குடல் புற்றுநோயை தடுக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இதை வேக வைத்து கொடுக்கலாம்.
இந்த காரக் கடலையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய தின்பண்டமான ஒன்று. மழைக்காலத்தில் வாய்க்கு அசைபோட இந்த காரசாரமான கடலைப்பருப்பே போதுமானது. குழந்தைகளுக்கும் ஒரு சத்தான ஸ்னாக்ஸ் ஆகவும் இருக்கும். ஆகவே கடலைப்பருப்பை தினமும் ஒரு கைப்பிடி அளவு நம் உணவில் சேர்த்துக் கொள்வோம்.