சட்டுன்னு ஒரு ஸ்வீட் ரெடி பண்ணனுமா? அப்போ இத ட்ரை பண்ணுங்க…
நாம் இன்று ஒரு பரபரப்பான வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமைக்க நேரமில்லாத மற்றும் உடல் நலம் சரியில்லாதவர்களுக்கு என பலருக்கு பிரட் மட்டுமே எளிதான உணவாக உள்ளது. அதை வைத்து நாம் எளிய முறையில் ஒரு ஸ்வீட் செய்யலாம் வாங்க…..
தேவையான பொருட்கள் :
பிரட் =7
தேங்காய்= 1/2 மூடி
சர்க்கரை=2 ஸ்பூன்
ஏலக்காய் =1/4 ஸ்பூன்
பால் =2-3 ஸ்பூன்
எண்ணெய்= தேவையான அளவு
செய்முறை:
பிரட்டை சிறிய துண்டுகளாக்கி அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து பால் 3 ஸ்பூன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின்பு அதனுடன் ஏலக்காய் சேர்த்து கெட்டியாக உருண்டை பிடிக்கும் பதத்தில் பிசைந்து கொள்ளவும். பிறகு முந்திரியையும் அதில் சேர்த்து கைகளில் லேசாக என்னை தடவிக் கொண்டு உருண்டை பிடிக்கவும்.
பிடித்த உருண்டைகளை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இப்போது வெளியில் கிருபிசியாக உள்ளே மெது மெதுவாகவும் சுவையான ஸ்வீட் ரெடி…..
பிரட்டில் நிறைந்துள்ள சத்துக்கள்:
கார்போஹைட்ரேட் அதிக அளவில் நிறைந்துள்ளது. நார்ச்சத்து, பாஸ்பரஸ், பி காம்ப்ளக்ஸ் விட்டமின்,துத்தநாகம் போன்ற தாது உப்புகளும், புரதச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளது.
நன்மைகள் :
குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த உணவாகும். உடல் எடை அதிகமாக நினைப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
காய்ச்சல் உள்ளவர்களுக்கு இது சிறந்த உணவாகும்.
முழு தானியகோதுமை பிரட்டில் தான் அதிகம் சத்துக்கள் உள்ளது.
தவிர்க்க வேண்டியவர்கள் :
- பிரட்டில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளதால் அது உடனடியாக உடலில் சர்க்கரையாக மாறும். எனவே ரத்தத்தில் சர்க்கரை அளவு. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
- உடல் பருமனாக இருப்பவர்கள் தவிர்க்கவும்.குழந்தைகளுக்கு காலையில் கொடுப்பதை தவிர்க்கவும் .
- மேலும் சீஸ் தடவி சாப்பிடுவதை இதய நோயாளிகள் கொலஸ்டரோல் உள்ளவர்கள் தவிர்க்கவும் .