ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உள்ள உறுப்புகளில் இதயம் மிக முக்கியமானது. இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், முழு உடலை பாதிக்கும். அதே சமயம் சில நேரங்களில் இதய பிரச்னை உயிரிழப்புகளை கூட ஏற்படுத்தக் கூடும். எனவே இதய ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
உலக இருதய தினம்
ஒவ்வொரு வருடமும் செப்.29-ஆம் தேதி உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1999-ஆம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனம் (WHO) செப்.29 ஆம் தேதி உலக இருதய தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தது. சுமார் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது .
உலக இருதய தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம்
இன்று பெரும்பாலானோர் இதயம் சம்பந்தமான பிரச்சனை இருப்பதை மிகப்பெரிய அளவிலான பிரச்சனைக்கு பின்பு தான் அறிந்து கொள்கின்றனர். அந்த வகையில் இதய நோய் மற்றும் இதய நோய்களை கண்டறிந்து அதன் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாளில் இதய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். மக்களுக்கு இதய நோயின் அறிகுறிகள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறுகிறது.
இருதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிகள்
உணவு முறைகள்
நமது உடலில் மிக பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டிய உறுப்புகளில் ஒன்று இதயம். அந்த வகையில் நாம் இதயத்தை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கண்காணிக்க வேண்டும்.
அதிகப்படியான சோடியம் உட்கொள்வது இதயம் சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால், அதிகப்படியான சோடியம் உட்கொள்ளலை தவிர்ப்பது நல்லது. ஆரம்பத்திலேயே இதயம் சம்பந்தமான ஏதேனும் சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கேற்ற சிகிச்சை பெறுவது மிகவும் நல்லது. இது பெரிய அளவிலான பிரச்சனைகள் நமது உடலில் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.
முக்கியமாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய உணவுகளை உட்கொள்ளுதல் நல்லது. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், அதிகமான கலோரிகள் நிறைந்த உணவுகளை தவிர்த்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய காய்கறி, பழங்கள், தானியங்கள், புரதம் நிறைந்த உணவுகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்வது சிறந்தது.
வாழ்க்கை முறை
உடலை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பது நல்லது. அதாவது ஒரே நிலையில் உட்கார்ந்த நிலையிலோ அல்லது வேலை செய்யாமலோ உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது இதயத்தை ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். எனவே உடலை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க முயற்சி செய்வது சிறந்தது.
மேலும் புகைபிடித்தல் மற்றும் மது பழக்கம் உள்ளவர்கள் அதனை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதேசமயம் மன அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் இது தொடர்பாக மருத்துவரை அணுகி, அதற்கு ஏற்ற சிகிச்சை பெற்று குறைந்தது ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூக்கத்தை கடைபிடிப்பது நல்லது. அதேபோல் காலையிலேயே உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய கொழுப்பு அமிலங்கள் ஆகும். எனவே, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளான, சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி, சோயாபீன்ஸ், தானியங்கள் போன்ற உணவுகளை உட்கொள்ளலாம்.
தானியங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓட்ஸ், பார்லி, பழுப்பு அரிசி, கோதுமை, கொள்ளு, கருப்பு அரிசி மற்றும் கம்பு போன்ற தானிய வகை உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவற்றில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, கலோரிகளை கரைக்க உதவுகிறது.
பழங்கள் மற்றும் காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்தை செல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுவதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
கால்சியம் மற்றும் வைட்டமின் D இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது, அதன்படி, குறைந்த கொழுப்புள்ள தயிர், பால், சீஸ் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. எனவே நாம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகளை உட்கொள்வதுடன், அவ்வப்போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…