சைவ உணவு உண்ணும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படுகிறது-ஆய்வின் முக்கிய தகவல்
அதிர்ச்சி தகவல் இறைச்சி உண்ணும் பெண்களை விட சைவ உணவு உண்ணும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
இறைச்சி உண்பவர்களுடன் ஒப்பிடும்போது, சைவ உணவு உண்பவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் 33% அதிகம் என்று 26,000-க்கும் மேற்பட்ட நடுத்தர வயது UK பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது
லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், அவ்வப்போது இறைச்சி உண்பவர்கள், பெஸ்கடேரியன்கள்-மீனை உட்கொள்ளும் ஆனால் இறைச்சி சாப்பிடாதவர்கள் மற்றும் வழக்கமான இறைச்சி உண்பவர்களுடன் ஒப்பிடுகையில் சைவ உணவு உண்பவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வின் முடிவுகள் வியாழக்கிழமை(ஆகஸ்ட் 11) BMC மெடிசின் இதழில் வெளியிடப்பட்டன.
சுமார் 20 வருடகளில், 26,318 பெண்களை உள்ளடக்கிய 822 பேருக்கு இடுப்பு எலும்பு முறிவு பாதிப்புக்கள் பதிவாகியுள்ளது. புகைபிடித்தல் மற்றும் வயது போன்ற காரணிகளை தவிர சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தைக் கொண்டுள்ளனர்.
நியூட்ரிஷன் முனைவர் பட்ட ஆய்வாளரும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான ஜேம்ஸ் வெப்ஸ்டர் கூறுகையில் “சைவ உணவு உண்ணும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் குறித்த சாத்தியமான கவலைகளை எங்கள் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், சைவ உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தவில்லை. எந்தவொரு உணவை உட்கொள்ளும்போதும், ஒருவரின் தனித்துவமான சூழ்நிலையையும், சீரான, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது’ என்று அவர் கூறினார்.