குளிர்காலம் தொடங்கியாச்சு! உங்கள் சரும அழகு மாறாமல் இருக்க சில டிப்ஸ்!
குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் நமது சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் நம்மை பாதுகாத்து கொள்வதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் நமது சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட மாற்றங்களால் நமது சரும அழகு கெடுவதோடு, இதனை தடுப்பதற்கு, நாம் செயற்கையான அழகு சாதன பொருட்களையும் வாங்கி உபயோகப்படுகிறோம்.
தற்போது இந்த பதிவில், குளிர்காலங்களில் நமது சரும அழகை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சில வழிமுறைகளை பார்ப்போம்.
- குளிர்காலங்களில் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவலாம் அல்லது குளிக்கலாம்.
- மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதால், சரும வெடிப்பை தவிர்க்கலாம்.
- நீர்சத்து வற்றி போகாமல் இருக்க, அதிக நீர், பாலசாறுகள் அருந்தலாம்.
- வைட்டமின் சி நிறைந்த உணவுகளான, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய், அன்னாசி போன்றவற்றை உட்கொள்ளலாம்.
- சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை தவிர்த்தல்.
- எண்ணெயில் பொறித்த உணவுகள், துரித உணவுகள் மற்றும் நொறுக்கு தீனி போன்றவற்றை தவிர்த்தல்.