குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு ஏன் சீம்பால் கொடுக்க வேண்டும்..?
பொதுவாகவே மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தவுடனேயே குழந்தைக்கு பால் கொடுக்குமாறு தான் மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அதற்கு காரணம் என்னவென்றால், குழந்தைகளுக்கு முதன்முதலாக தாயிடம் சுரக்கும் சீம்பாலை கொடுக்க வேண்டும் என்பதால் தான்.
சீம்பால் என்பது தாய்ப்பால் சுரப்பதற்கு முன்பு தாய்மாரின் மார்பில் இருந்து சுரக்கும் ஒரு சிறப்பு வகை பால் ஆகும். இது குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. அவை நோய்த்தொற்றுகளுக்கு எதிராக குழந்தைகளை பாதுகாக்கிறது.
சீம்பாலின் நன்மைகள்
சீம்பால் குழந்தைக்கு நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதோடு, இது குழந்தையின் நோயெதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது. சீம்பால் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. குறிப்பாக இது குழந்தையின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.
சீம்பால் குழந்தையின் செரிமானத்தை மேம்படுத்த உதவுவதோடு, குழந்தைக்கு மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தடுக்கிறது. சீம்பால் குழந்தையின் எடை அதிகரிக்க உதவுகிறது. குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு சீம்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன்பின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க தொடங்க வேண்டும்.
சீம்பால் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதில் குழந்தையை பாதுகாப்பதற்க்கு தேவையான புரத சத்து, வைட்டமின் சத்துக்களும் உள்ளது. இது குழந்தைக்கு முதல் நோய் தடுப்பு மருந்தாகும். எனவே சீம்பாலை குழந்தைகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டும்.