மாட்டுச் சாணத்தை வீட்டு வாசலில் தெளிப்பது ஏன்? அதன் பாரம்பரியம் என்ன?

Sprinkling cow dung

மாட்டு சாணம் : வீட்டு வாசலில் மாட்டு சாணம் தெளிக்கும் பாரம்பரியம் இந்தியாவில் பல்வேறு சமூகம் மற்றும் மதங்களில் காலகாலமாக இருந்து வருகிறது. வீட்டு வாசலில் பசுவின் சாணத்தை தெளிப்பது என்பது பல்வேறு கலாச்சார மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளில் ஒன்றாகும்.

மாட்டு சாணத்தில் ஆன்டி-மைக்ரோபியல் (antimicrobial) குணங்கள் உள்ளன, இது சூழலிலுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய கிருமிகளை அழிக்க உதவுகிறது. நாம் வெளியே எங்கே சென்றாலும், அங்கே விஷ அணுக்களின் தன்மை பரவி இறுகின்றது. அது நம் பாதங்களில் பட்டவுடன், நமது உடலில் தொற்றி கொள்கின்றன.

இதனால், மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால், வெளியிலிருந்து வரும், தவறான உணர்வுகளின் நஞ்சானது அடக்கப்படுகின்றது என்று நாம் மூதாதையர்களில் நம்பிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் சில கிராமப்புறங்களில் வேரூன்றிய ஒரு நடைமுறையாக இன்றும் கூட வருகிறது.

இந்த காரணங்களினால், மாட்டு சாணம் தெளித்தல் ஒரு வழக்கமான நடைமுறையாகிவிட்டது. இதற்குப் பின்வரும் காரணங்கள் உள்ளன, இந்த நடைமுறை பின்பற்றப்படுவதற்கான சில காரணங்கள் இங்கே பார்க்கலாம்.

சுத்திகரிப்பு : பசுவின் சாணம் இயற்கையான சுத்திகரிப்பாளராகக் கருதப்படுகிறது. இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, இது ஒரு இயற்கை கிருமிநாசினியாக பார்க்கப்படுகிறது. வீட்டு வாசலில் தெளிப்பதன் மூலம், அப்பகுதியை சுத்தப்படுத்துவதுடன், தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மற்றும் பூச்சிகளை தடுக்க உதவுகிறது.

மத முக்கியத்துவம் : இந்து மதத்தில், பசு ஒரு புனித விலங்காகக் கருதப்படுகிறது, மேலும் அதன் சாணம் தூய்மையானதாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. சடங்குகள் மற்றும் வீட்டு சுப காரியங்களுக்காக பசுவின் சாணத்தைப் பயன்படுத்துவது வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

சுற்றுச்சூழல் நன்மைகள் : பசுவின் சாணம் மக்கும் தன்மையுடையது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இது இரசாயன கிருமிநாசினிகள் மற்றும் பூச்சி விரட்டிகளுக்கு இயற்கையான மற்றும் நிலையான மாற்று பொருளாக பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பருவநிலை மாற்றத்திற்கும், நிலத்தின் பசியை பராமரிப்பதற்கும் உதவுகிறது.

பாரம்பரிய நடைமுறைகள் : இந்த நடைமுறை பெரும்பாலும் தலைமுறைகள் வழியாக பின்பற்றி வருகின்றனர். இது மூதாதையர்களின் வாழ்க்கை முறைகளுடனான தொடர்பை பிரதிபலிக்கிறது மற்றும் தூய்மை மற்றும் ஆரோக்கியத்தை பராமரிக்கும் இயற்கை மற்றும் பாரம்பரிய முறைகளுக்கான மரியாதையாக இன்றும் பார்க்கப்படுகிறது.

உரமாக பயன்பாடு : மாட்டு சாணம் சிறந்த இயற்கை உரமாகும். இது நிலத்தின் வளத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் பயிர்களை ஆரோக்கியமாக வளர்க்க கூடிய தன்மை உடையது. ஆம், மாட்டு சாணம் நைட்ரஜன், பாஸ்பரஸ், மற்றும் பொட்டாசியம் போன்ற மூலப்பொருட்களை கொண்டுள்ளது, இது பயிர்களின் வளத்தை அதிகரிக்க உதவுகிறது.

இந்த நடைமுறை சிலருக்கு அசாதாரணமாகத் தோன்றினாலும், இவ்வாறான சாஸ்திரங்கள் காண்பித்த தத்துவங்கள் பொய்யல்ல. மொத்தத்தில், மாட்டு சாணத்தின் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கும், ஆரோக்கியத்திற்கும் நன்மைசெய்யக்கூடியதாகவும், பாரம்பரியத்தை கடைபிடிக்கும் விதமாகவும் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்