யாரெல்லாம் உங்க முகத்துக்கு ஐஸ் கியூப் வைக்கிறீங்க? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

ice cube

Ice cube-ஐஸ் கட்டி கொண்டு முகத்தில் மசாஜ் செய்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி இங்கே காணலாம்.

எப்படியாவது முகத்தை அழகாக்க வேண்டும் என்பதற்காக பலரும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். அதில் தற்போது அதிகமாக சருமத்தில்  பயன்படுத்தப்படுவது ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்வது தான். அதனால் பல நன்மைகளும் ஏற்படுகிறது .அளவுக்கு மீறி செய்தால் பின் விளைவுகளும் ஏற்படுகிறது.

நன்மைகள்;

ஐஸ் கட்டிகளை வைத்து முகத்தில் மசாஜ் செய்து வந்தால் முகத்திற்கு ரத்த ஓட்டம் நன்றாக செல்கிறது .இதனால் முகம் பளபளப்பாக தோன்றும். முகத்தில் டயர்டு  நீங்கி  எப்போதுமே முகம் பிரஷ்ஷாக தோற்றமளிக்கும்.

மேலும் கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் படிப்படியாக குறைக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல்  சூரிய ஒளியினால் ஏற்படும் கருமை நீக்கப்படுகிறது. அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படுவதால் முகப்பரு ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.

தூக்கமின்மை மற்றும் அதிகமாக செல்போன் பார்ப்பதன் மூலம் கண்களுக்கு கீழ்  வீக்கம் ஏற்படுகிறது. இந்த ஐஸ் கட்டி மசாஜ் செய்வதன் மூலம் இவை குறைக்கப்படும் .

தொடர்ந்து இதை செய்து வந்தால் முகத்தில் சுருக்கம் ஏற்படுவது தள்ளிப் போடப்படுகிறது. இதனால் முகம் இளமையாக காட்சியளிக்கும். ஒரு சிலருக்கு அதிகமாக முகத்தில் ஓபன் போர்ஸ் இருக்கும் .இந்த ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்யும் போது அது குறைக்கப்படுகிறது .

மேலும் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு எப்போதுமே பளபளப்பாக இருக்கும் .எந்த ஒரு மேக்கப் செய்வதற்கு முன்பும் ஐஸ் கட்டிகளை கொண்டு மசாஜ்  செய்து பிறகு செய்தால் நீண்ட நேரம் மேக்கப் இருக்கும் .

முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்ட பிறகு ஐஸ் கட்டி மசாஜ் செய்தால் அழுக்குகள் சருமத்திற்குள் நுழைவது தடுக்கப்படும்.

ஐஸ் கட்டிகள் தயார் செய்வதற்கு தண்ணீர் மட்டுமல்லாமல் கேரட் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ், உருளைக்கிழங்கு சாறு போன்றவற்றை பயன்படுத்தியும் தயார் செய்யலாம்.

செய்யக்கூடாததும் ..தவிர்க்க வேண்டியவர்களும்..

வறண்ட சருமம் உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே போதும் .எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வரலாம்.

மேலும் ஐஸ்கட்டிகளை நேரடியாக வைக்காமல் ஒரு காட்டன் துணியில் வைத்து பிறகுதான் சுழற்சி முறையில் மசாஜ் செய்ய வேண்டும். ஒரே இடத்தில் ஒரே நிமிடத்திற்கு மேல் வைக்க கூடாது.

மேலும் குளிர்காலத்தில் ஐஸ் கட்டி மசாஜ் செய்வதை தவிர்க்கவும். சைனஸ் தொந்தரவு இருப்பவர்களும் இதை செய்வதை தவிர்க்கவும் .

ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை அழுத்தி தேய்க்க கூடாது. பத்து நிமிடங்களுக்கு மேல் இந்த முறையை செய்வதை தவிர்க்கவும் ஏனெனில் சளி மற்றும் மூக்கடைப்பு தொந்தரவை ஏற்படுத்தும்.

ஆகவே மேற்கூறிய வழிமுறைகளை பயன்படுத்தி ஐஸ் கட்டி மசாஜின் நன்மைகளை பெற்று ஆரோக்கியமான அழகான சருமத்தை பெறுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்