ரம்புட்டான் பழம் யாரெல்லாம் சாப்பிடலாம்?.. யார் சாப்பிடக்கூடாது தெரியுமா .?
சென்னை -ரம்புட்டான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.
ரம்புட்டான் பழம் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளை தாயகமாக கொண்டுள்ளது . இந்தியாவில் தமிழ்நாடு ,கேரளா ,கர்நாடகா பகுதிகளிலும் விளைகிறது . இந்த ரம்புட்டான் பழம் காயாக இருக்கும் போது பச்சை நிறத்திலும் அறுவடைக்கு வந்த பிறகு வெளிர் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் முடி போன்ற வெளிப்புற தோற்றத்தை கொண்டது. இதன் உள்பகுதி நுங்கு போல் காட்சி தருகிறது. இதன் சுவை புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் இருக்கும்.
ரம்புட்டான் பழத்தின் சத்துக்கள்;
ஒரு நாள் ஒன்றுக்கு நாளில் இருந்து ஐந்து பழம் எடுத்துக் கொள்ளும் போது ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் சி சத்தில் 50 சதவீதம் கிடைத்து விடுகிறது .அது மட்டுமல்லாமல் ஆப்பிள் பேரிச்சம் பழத்துக்கு இணையான நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது. மேலும் பொட்டாசியம், காப்பர், மாங்கனிசு, பாஸ்பரஸ், மெக்னீசியம், ஆன்டி ஆக்சிடென்ட், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.
ஆரோக்கிய நன்மைகள்;
- ரம்புட்டான் பழத்தில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதால் நாவறட்சியை தடுக்கும். உடல் எடை குறைப்பவர்கள் ரம்புட்டான் பழம் சாப்பிடும் போது வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். இதன் மூலம் பசியை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். மேலும் இது ஆரோக்கியமான உடல் எடை குறைப்பு முறையாகவும் இருக்கும்.
- ரம்புட்டான் பழத்தை வாரத்திற்கு மூன்று நாட்கள் ஆவது சாப்பிட்டு வரவும். இதனால் நகம் ,முடி தோல் போன்றவை பளபளப்பாக இருக்கும்.
- இந்தப் பழத்தில் கரையாத நாச்சத்துக்கள் மற்றும் கரையும் நாச்சத்துக்கள் உள்ளது. கரையாத நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும் நல்ல பட்டீரியாக்கள் அதிகரித்து அந்த பாக்டீரியாக்கள் அசிடேட், மியூடேட் போன்ற கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்கிறது .இது எரிச்சல் ஊட்டும் குடல் நோய் மற்றும் பெருங்குடல் அலற்சியை கட்டுப்படுத்துகிறது.
- காப்பர் சத்து அதிகமாக இருப்பதால் மூளையின் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. மேலும் எலும்பில் உள்ள செல்களை பராமரிக்க உதவுகிறது. பற்களில் ஏற்படும் அரிப்பையும் தடுக்கிறது.
- இதில் பாஸ்பரஸ் சத்து அதிகம் இருப்பதால் கிட்னியில் உள்ள கழிவுகளை சுத்தமாக அகற்றவும் உதவி செய்கிறது.
- வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு இரும்புச்சத்தை உடல் உக்கிரகித்துக் கொள்ளவும் உதவி செய்கிறது. அது மட்டும் இல்லாமல் விந்தணுக்களின் தரத்தை உயர்த்துவதோடு அதன் எண்ணிக்கையும் அதிகப்படுத்துகிறது.
முக்கிய குறிப்புகள்;
என்னதான் ரம்புட்டான் பழத்தில் சத்துக்கள் அதிகம் இருந்தாலும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் ,கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் இதன் விதை மற்றும் தோல் பகுதிகளை நீக்கிவிட்டு தான் உட்கொள்ள வேண்டும். சமீபத்திய ஆய்வின்படி இதன் விதையில் நார்கோட்டிக் என்ற விஷத்தன்மை உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது . இது சாப்பிடுபவரை கோமாவிற்கு அழைத்துச் செல்லும் நிலையும் ஏற்படுத்தலாம் என்றும் சில சமயங்களில் உயிரைக் கூட பறிக்கும் அபாயம் உள்ளது எனவும் ஆய்வுகள் கூறுகிறது.
அது மட்டுமல்லாமல் இதில் வழவழப்புத் தன்மை இருப்பதால் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது விழுங்க நேரிடும். அதனால் கவனமாக கொடுக்க வேண்டும்.
எனவே ரம்புட்டான் பழத்தின் நன்மைகளை பெற வேண்டும் என்றால் அதனை தினமும் குறிப்பிட்ட அளவு கவனத்துடன் எடுத்துக்கொள்ளும் போது நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.