திருமணம் முடிந்து ரகசிய உறவில் இருக்கும் ஆண்களே.? இதை படியுங்கள்.!

Published by
கெளதம்

ஆண்கள…..உங்கள் காதலியுடன் அல்லது மனைவியுடன் இருக்கும்போது வேறு யாரையாவது சைட் அடிக்கீர்களா.? நீங்கள் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டு அல்லது ஒருவருடன் காதல் வசத்தில் இருக்கும்போது நீங்கள் வேற ஒருவரிடம் ஈர்க்கப்படலாம்.

உங்கள் புதிய ரகசிய துணையுடன் இருப்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உங்கள் துணையை ஏமாற்றுவது ஒரு பயங்கரமான காரியம் என்பது உங்களுக்குத் தெரியுமா.? உங்கள் துணையை ஏமாற்றும்போது சில விஷயங்கள் நடக்கலாம். நீங்கள் செய்யும் தவறான செயலால் ஏற்படக்கூடிய விளைவுகளை நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும்.

உங்கள் ரகசிய உறவை நீங்கள் தொடர வேண்டுமா.? அல்லது உங்கள் துணையுடன் உண்மையாக இருக்க வேண்டுமா.? தவறாக செயல்படும்போது அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிந்திக்கவில்லை என்றால், உங்கள் துணையை ஏமாற்றுவது ஏன் என்பதைப் புரிந்துகொள்ள இதனை படிக்கவும்.

நம்பிக்கையை இழப்பீர்கள்:

உங்கள் துணையின் பின்னால் வேறொருவரை நீங்கள் பார்க்கத் தொடங்கும்போது, உங்கள் கூட்டாளியின் நம்பிக்கையை நீங்கள் இழக்க நேரிட கூடும் . உங்களது ரகசிய உறவு உங்கள் மனைவி அல்ல காதலிக்கு தெரிந்த உடன் அவர்கள் உங்களை நம்புவதை நிறுத்திவிடுவார்கள்.

மேலும், இது தீவிரமடைந்தால் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், உங்கள் துணையால் முன்பு போல் உங்களை நம்ப முடியாமல் போக வாய்ப்பு அதிகாக இருக்கிறது.

பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாது:

உங்கள் துணையை ஏமாற்றுவதை ஒருபோதும் யாராலும் நியாயப்படுத்த முடியாது. உங்கள் திருமண உறவில் சில சிக்கல் காரணமாக உங்கள் துணையை நீங்கள் ஏமாற்றுகிறீர்கள் என்பதை சில நேரத்தில் நீங்களே அதனை நினைவுபடுத்தலாம். ஆனால், உங்கள் துணையை நீங்கள் ஏமாற்றும் தருணத்தில் இருக்கும்போது நீங்கள் உண்மையான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் இருந்து விலகிவிடுகிறீர்கள் என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம்.

அவற்றை எதிர்கொண்டு தீர்ப்பதற்குப் பதிலாக, நீங்கள் வேறொருவருடன் இருக்கும்பொழுது உங்களுக்கு அப்போது மகிழ்ச்சியைத் தரலாம், ஆனால் இது உங்களுக்கு பெரிய சிக்கல்களை கொண்டு போய்விடும்.

மற்ற உறவுகளை பாதிக்கும்:

இது போன்ற செயலில் ஈடுபடும்போது, உங்கள் துணையின் நம்பிக்கையை இழப்பது மட்டுமல்லாமல். உங்கள் துணையை ஏமாற்றி நீங்கள் பிடிபட்டால், அது உங்களுக்கு மற்ற உறவுகளையும் இழக்க நேரிடும். உங்களை இதற்கு முன் மதிக்கும் நபர்கள் உங்களை ஒருபொருட்டாக கூட எடுக்க மாட்டார்கள்.

ஒன்றாக இருக்க மாட்டீர்கள்:

அந்த மாதிரி செயலில் பிடிபட்டு மனைவியுடன் இல்லாமல் ரகசிய உறவில் இருந்தால் நீங்கள் இனிமேல் உங்கள் மனைவியுடன் ஒன்றாக இருக்க மாட்டீர்கள் என்பது உறுதி. உங்கள் துணையை ஏமாற்றுவது உங்களுக்கு மோசமானதாக இருப்பதற்கான மற்ற காரணங்களில் இதுவும் ஒன்று.

Recent Posts

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

31 minutes ago

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

1 hour ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

2 hours ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

12 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

13 hours ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

14 hours ago