என்னது.. பைனாப்பிள் ரசமா? அது எப்படிங்க.. செய்றது?..

Published by
K Palaniammal

Rasam recipe –வித்தியாசமான சுவையில் அண்ணாச்சி பழ ரசம் செய்வது எப்படி என இப்பதில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்;

  • அண்ணாச்சி பழம் =இரண்டு துண்டுகள்
  • புளி =நெல்லிக்காய் அளவு
  • தக்காளி= இரண்டு
  • பெருங்காயம் =அரை ஸ்பூன்
  • சீரகம் =ஒரு ஸ்பூன்
  • மிளகு =1/2 ஸ்பூன்,
  • மல்லி= ஒரு ஸ்பூன்,
  • பூண்டு=6  பள்ளு
  • வரமிளகாய்= 3
  • பருப்பு= 25 கிராம்

செய்முறை;

முதலில் பருப்பை நன்கு வேகவைத்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு , கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்து   கொள்ளவும் .அதில் சிறிது சிறிதாக நறுக்கிய அண்ணாச்சி பழ துண்டுகளை சேர்த்து வதக்கி விடவும். அதனுடன் சிறிதளவு பருப்பு வேக வைத்த தண்ணீரையும் சேர்த்து பத்து நிமிடம் வேகவைத்து கொள்ளவும். பிறகு சீரகம், மிளகு, மல்லி, பூண்டு இவற்றை இடித்துக் கொள்ளவும். தக்காளியை சுடு தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து அதனுடன் புளியையும் சேர்த்து இரண்டையும் நன்றாக கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

அதனுடன் மீதமுள்ள பருப்பு தண்ணீர் மற்றும் இடித்து வைத்துள்ள சீரகம் மிளகு பொடியை  சேர்த்து கலந்து விடவும். இப்போது வெந்து கொண்டிருக்கும் அண்ணாச்சி பழத்துடன் சேர்த்து கலந்து விடவும் .அதனுடன் சிறிதளவு பெருங்காயமும் சேர்த்து நுரை கட்டும் வரை அடுப்பில் வைத்து  கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி உப்பு சேர்த்து கலந்துவிட்டால் வித்தியாசமான சுவையில் அண்ணாச்சி பழ ரசம் ரெடி.

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

52 minutes ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

2 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

4 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

5 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

5 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

1 day ago