என்னது.. பைனாப்பிள் ரசமா? அது எப்படிங்க.. செய்றது?..
Rasam recipe –வித்தியாசமான சுவையில் அண்ணாச்சி பழ ரசம் செய்வது எப்படி என இப்பதில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்;
- அண்ணாச்சி பழம் =இரண்டு துண்டுகள்
- புளி =நெல்லிக்காய் அளவு
- தக்காளி= இரண்டு
- பெருங்காயம் =அரை ஸ்பூன்
- சீரகம் =ஒரு ஸ்பூன்
- மிளகு =1/2 ஸ்பூன்,
- மல்லி= ஒரு ஸ்பூன்,
- பூண்டு=6 பள்ளு
- வரமிளகாய்= 3
- பருப்பு= 25 கிராம்
செய்முறை;
முதலில் பருப்பை நன்கு வேகவைத்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு , கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்து கொள்ளவும் .அதில் சிறிது சிறிதாக நறுக்கிய அண்ணாச்சி பழ துண்டுகளை சேர்த்து வதக்கி விடவும். அதனுடன் சிறிதளவு பருப்பு வேக வைத்த தண்ணீரையும் சேர்த்து பத்து நிமிடம் வேகவைத்து கொள்ளவும். பிறகு சீரகம், மிளகு, மல்லி, பூண்டு இவற்றை இடித்துக் கொள்ளவும். தக்காளியை சுடு தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து அதனுடன் புளியையும் சேர்த்து இரண்டையும் நன்றாக கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
அதனுடன் மீதமுள்ள பருப்பு தண்ணீர் மற்றும் இடித்து வைத்துள்ள சீரகம் மிளகு பொடியை சேர்த்து கலந்து விடவும். இப்போது வெந்து கொண்டிருக்கும் அண்ணாச்சி பழத்துடன் சேர்த்து கலந்து விடவும் .அதனுடன் சிறிதளவு பெருங்காயமும் சேர்த்து நுரை கட்டும் வரை அடுப்பில் வைத்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி உப்பு சேர்த்து கலந்துவிட்டால் வித்தியாசமான சுவையில் அண்ணாச்சி பழ ரசம் ரெடி.