Soap- நீங்கள் பயன்படுத்தும் சோப் நல்லதா கெட்டதா என்றும் சோப் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
மார்க்கெட்டுகளில் பலவிதமான சோப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. புதிது என்றாலே நம்மில் பலருக்கும் அது எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் பயன்படுத்த துவங்குவோம் . அதோடு அதைப் பற்றிய விளம்பரங்களை காணும் போது நம் ஆசையையும் ஆர்வத்தையும் தூண்டச் செய்யும். அந்த ஆசை ஒரு கட்டத்தில் ஆபத்தில் சென்று விடுகிறது.
ஆமாங்க.. பலருக்கும் சருமத்தில் பல பிரச்சனைகள் இருக்கும் அதற்கு காரணம் என்னவென்றே தெரியாமல் இருப்போம் ஆனால் சோப்பும் ஒரு காரணம் என்று யாரும் யோசிப்பதில்லை. சோப்புகள் அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றது அல்ல. ஒரு சிலருக்கு சோப் அலர்ஜியை ஏற்படுத்தும்.
இதனால் உங்கள் சருமத்தில் எரிச்சல், முகப்பரு ,தடிப்பு , வறட்சி ,சருமத்தில் உள்ள உப்புத்தன்மை குறைந்து போவது போன்றவை ஏற்படும். இதற்கு 70% காரணங்கள் நீங்கள் பயன்படுத்தும் சோப் .ஏனென்றால் அதில் பயன்படுத்தப்படும் தீங்கான ரசாயனம் தான். பெரும்பாலானோர் இதை கண்டு கொள்வதும் இல்லை.
நம் இந்தியாவில் HAMMAM, LIFE BUOY, SANTOOR ,MYSORE SANTAL, CHANDRIKA, PEARS, DETTOL ,CINTHOL, LIRIL ,FIAMA, VIVEL, MEDIMIX ,HIMALAYA ,MARGOபோன்ற சோப்புகள் அதிக அளவில் பயன்படுத்த படுகிறது.
மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும் சோப்புகளை கொண்டு பலவித ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையின்படி சோப்புகளை தரம் வாரியாக பிரிக்கப்படுகிறது.
டெட்டால், பியர்ஸ், பியாமா, விவெல் ,லைப் பாய் போன்ற சோப்புகள் 8- 9 வகையான தீங்கான நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது .மேலும் இதன் வாசனை நீண்ட நேரம் இருக்க வேண்டும் என்பதற்காக வலிமைமிக்க வாசனை திரவியங்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் நிறம் நீண்ட நாட்களுக்கு வருவதற்கு வலிமை மிக்க செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகிறது.
ஹமாம், ரெக்சோனா, சிந்தாள், லிரில் போன்ற சோப்புகளில் 5 லிருந்து 6 வகையான நச்சுவாய்ந்த கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. அதே போல் அதிகமான செயற்கை நிறமூட்டிகளும் வாசனை திரவியங்களும் பயன்படுத்தப்படுகிறது.
சந்தூர் ,மைசூர் சாண்டல், மெடிமிக்ஸ் ,மார்கோ ,டவ் ,சந்திரிகா, ஹிமாலயா போன்ற சோப்புகளில் 2 லிருந்து -3 வகையான நச்சு வாய்ந்த கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல் வாசனை திரவியங்களும் செயற்கை நிறமூட்டுகளும் குறைவான அளவில் சேர்க்கப்படுகிறது.
பதஞ்சலி முல்தானிமட்டி சோப் முதன்மை தரம் வாய்ந்ததாக கூறப்படுகிறது .இதில் வலிமைமிக்க ரசாயனங்கள் நிறமூட்டிகள் வாசனை திரவியங்கள் சேர்க்கப்படுவதில்லை இது தவிர இன்னும் பல சோப்புகள் மார்க்கெட்டுகளில் உள்ளது .அதை கண்டுபிடிக்க நீங்கள் சோப்பு வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டும்.
மார்க்கெட்டுகளில் நீங்கள் சோப் வாங்கும் போது அதில் TFM[ total fatty matter] 80 சதவீதத்திற்கு மேல் உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். அனைத்து சோப்பின் கவரிலும் இந்த TFM குறிப்பிடப்பட்டிருக்கும் TFM அளவு 76க்கு குறைவாக இருந்தால் அதனை தேர்வு செய்யாதீர்கள்.
மேலும் மூல பொருட்கள்[ingredients] குறிப்பிடாத சோப்புகளை தேர்வு செய்யக்கூடாது. ஏனெனில் அவர்கள் நுகர்வோரிடம் சேர்க்கப்படும் பொருட்களை மறைக்கின்றனர். சோப் வாங்கும்போது இந்த சில கெமிக்கல்கள் இருந்தால் அவற்றை தவிர்ப்பது உங்கள் சருமத்திற்கு நல்லது.
இந்த கெமிக்கல்கள் இருந்தால் அந்த சோப்புகளை நீங்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
எனவே சோப் என்பது நம் உடலில் உள்ள அழுக்குகளை போக்கி புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வது மட்டுமல்ல. சரும பாதுகாப்பிற்கும் அவசியமானது .நீங்கள் கவனித்து தேர்வு செய்வது சிறந்தது. இதன்மூலம் பல சரும வியாதிகள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளலாம் .மேலும் தற்போது ரசாயனம் கலக்கப்படாத சோப்புகளும் மார்க்கெட்டில் கிடைக்கிறது அதை தேர்வு செய்து கொள்ளலாம்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…