சென்னை: நம்மை அழகாக காட்டுவதில் பற்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதன் அடிப்படையில் ஒரு சிலருக்கு பற்கள் திடீரென மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கும். இதனால் வாயை திறந்து மற்றவர்களிடம் சகஜமாக பேசுவதற்கு தயங்குவார்கள். அதேபோல் கடைக்குச் சென்று அங்கு கடைக்காரரிடம் பேஸ்ட் கேட்டால் கிராம்பு போட்டதா ?. வேப்பிலை போட்டதா?. புதினா போட்டதா? என கேட்கிறார், என்னடா இது பேஸ்ட்டுக்கு வந்த சோதனை அப்படின்னு நெனச்சு எதை வாங்குவது என்று தெரியாமல் சில நேரத்தில் குழம்பி விடுவோம்..அதை பற்றி எல்லாம் இங்கே தெரிந்து கொள்வோம் .
நம் உணவை எச்சிலுடன் சேர்த்து மென்று சாப்பிடும் போது பற்களில் படிய வாய்ப்புள்ளது, பற்கள் மட்டுமல்லாமல் பல் ஈறுகளிலும் ,இடுக்குகளிலும் படியும் .இதை தினமும் சரியாக பல் துளைக்கினோம் என்றால் நிச்சயம் நீங்கிவிடும். இதுவே கடமைக்கு செய்தோம் என்றால் பற்களில் படிந்து உள்ள உணவுகள் சேர்ந்து நாளடைவில் கால்சியம் ,பாஸ்பேட் போன்ற தாதுக்களுடன் சேர்ந்து கடினமாகி மஞ்சள் நிறத்தில் மாறி கரையாகி விடும். இப்படி இருக்கும் பட்சத்தில் பத்து முறை நீங்கள் பிரஸ் செய்தாலும் நீங்காது.
தற்போது மார்க்கெட்டுகளில் பலவிதமான பேஸ்டுகள் வந்துவிட்டது .ஆனால் அனைத்து பேஸ்டுகளிலும் அடிப்படையாக foaming ஏஜென்ட் நுரை வருவதற்காகவும் ,Abrasive ஏஜென்ட் ஈறுகளில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வதற்காகவும் சேர்க்கப்படுகிறது .இதற்குப் பிறகு பேஸ்ட்டின் கலர் மற்றும் வாசனைக்காக இன்னும் பல கெமிக்கல் சேர்த்து நம்மை கவர்வதற்காக சேர்க்கப்படுகிறது.
உதாரணமாக கூற வேண்டும் என்றால் தோசை மாவை வைத்து தோசை ஊற்றலாம், ஆனால் அந்த தோசை மேல் நமக்கு பிடித்த மசால் தோசை, கறி தோசை என பலவித தோசையை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால் தோசை மாவு ஒன்றுதானே அதுபோல்தான் பேஸ்டுகளும் எல்லா பேஸ்டும் ஒன்றுதான். நம்மை கவருவதற்காக பல பிளேவர்களை சேர்த்து தயாரித்து விற்கின்றனர் . இதில் உள்ள கெமிக்கல் மிக நச்சு வாய்ந்தது தான் ஆனால் நாம் அதை விழுங்கப் போவதில்லை அதனால் பயப்படத் தேவையில்லை.
Ministry of consumer affairs ஒரு ஆய்வை வெளியிட்டள்ளது . இந்தியாவில் உள்ள அனைத்து பேஸ்ட்களையும் ஆராய்ச்சி செய்து அதன் முடிவில் எந்த ஒரு ஹெர்பல் பேஸ்ட்களும் 100% இயற்கையானது அல்ல. வெறும் 2.5-10 சதவீதம் தான் இயற்கையான பொருட்கள் சேர்க்கப்படுகிறது. மீதமுள்ள 90 சதவீதம் ரசாயனம் தான் என ஆய்வு குறிக்கிறது.
மேலும் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிளூரைடு இல்லாத பேஸ்ட்களை கொடுக்க வேண்டும். 6- 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குறைந்த அளவு பிளூரைடு பேஸ்டுகளை கொடுக்க வேண்டும் ,ஏனென்றால் அவர்கள் சரியாக எச்சிலை துப்பினாலும் ப்ளூரைட் சிறிதளவு சேர்க்கப்பட்டிருக்கும் .மேலும் அந்த வயது காலகட்டத்தில் தான் அவர்களுக்கு நிரந்தர பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ப்ளுரைடு பேஸ்ட்டுகளை பயன்படுத்தலாம்.
பேஸ்ட்டுகளைப் போல பிரஷ்களும் மார்க்கெட்டுகளில் அதிகமாக கிடைக்கிறது. பல் துலக்க பேஸ்ட்களை விட பிரஷ்கள் அவசியமானது. பிரஷ்களில் ஹார்டு ,மீடியம், சாப்ட் என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சாஃப்ட் வகை பிரஷ்களை பயன்படுத்துவது தான் சிறந்தது. ஹார்டு மற்றும் மீடியம் வகைகளை தவிர்க்க வேண்டும் .ஏனெனில் இது நாளடைவில் பற்கள் தேய்மானம் அடைய செய்து விடும்.
மேலும் ப்ரஷ்களின் தலைப்பகுதி சிறிதாக இருக்குமாறு பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கடவாய் பற்களை சுத்தம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் .மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பிரஷ்களை நிச்சயம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
75% மக்கள் பல் தேய்ப்பதை தவறாக செய்கின்றனர். பிரஷ்ஸில் ஒரு வேர்க்கடலை அளவு மட்டும் பேஸ்டை வைத்தால் போதுமானதாகும். 45° ஆங்கிளில் ஈரிலிருந்து பல்லிற்கு தேய்க்க வேண்டும். பல் இடைவெளிகளில் தேய்க்க வேண்டும் இவ்வாறு இரண்டு நிமிடங்கள் தேய்ப்பதே போதுமானது. அதற்கு மேல் தேய்க்க கூடாது.
அவ்வப்போது நல்லெண்ணையில் வாய் கொப்பளித்து வருவதன் மூலம் பல் ஈறுகள் ஆரோக்கியமாக இருப்பதோடு மஞ்சள் நிறம் நீங்க உதவி செய்யும். ஆகவே நம்மை அழகாக காட்டும் பற்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிப்பது நம் கடமையாகும்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…