போகி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது? வாங்க பார்க்கலாம்!
போகி பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் இறுதி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதாவது பொங்கல் திருநாளாம் தமிழர் திருநாளுக்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
போகி பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் இறுதி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதாவது பொங்கல் திருநாளாம் தமிழர் திருநாளுக்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த பண்டிகை ஜனவரி 13-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் சில வருடங்களில் 14-ஆம் தேதியிலும் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
போகி பண்டிகை நாளில் பழையன கழித்து புதியன புகவிடும்’ நாளாகக் கருதி தான் மக்கள் கொண்டாடுகின்றனர். இதனால் தான் வீட்டிலுள்ள பழையவற்றை, அதவாது பயனற்ற பொருட்கள் ஆகியவற்றை எடுத்து எரிகின்றன. இப்பண்டிகை ‘போக்கி’ என்றுதான் அழைக்கப்பட்டது. ஆனால் இந்த சொல் நாளடைவில் மருவி ‘போகி’ என மாறிவிட்டது.
வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை வெளியேற்றி, புதியவை வீட்டை வந்து சேரவேண்டும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதனால் தான் அந்த நாளில் வீட்டில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றி வீடுகளை சுத்தப்படுத்துகின்றன. இந்த பண்டிகை அன்று பழைய பொருட்கள் மட்டுமல்லாது, நம்மிடம் உள்ள பகை, கசப்பு, கோபம் போன்ற சுபாவங்களும் நீங்க வேண்டும்.