Lips-உதடுகள் திடீரென கருப்பாக காரணங்கள் என்ன மற்றும் அதை சரி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
முக அழகை பொருத்தவரை உதடுகளை நாம் பெரிதாக பராமரிப்பதில்லை. அதனை கண்டு கொள்வதும் இல்லை. ஒரு சிலருக்கு திடீரென உதடுகள் கருப்பு அல்லது நீல நிறமாக மாறிவிடும் இந்த மாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளது.
உதடு வறட்சியால் ஒரு சிலர் உதடை கடித்துக் கொண்டே இருப்பார்கள் இதனால் எச்சில் மூலம் ஹைப்பர் பிக்மென்டேஷன் உருவாகிறது இதனாலும் உதடு கருப்பாகிறது.
புகைப்பிடித்தல் மூலமும் உதடுகள் கருப்பாக மாறும் இதில் உள்ள நிக்கோட்டின் உதடுகளை கருப்பாக மாற்றுகிறது. மேலும் விட்டமின் பி 12 மற்றும் போலிக் ஆசிட் குறைபாடு, இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்களுக்கும் உதடுகள் நிறம் மாறும்.
அது மட்டுமல்லாமல் உதடுகள் நிறம் மாற்றத்திற்கு உள் உறுப்புகளின் நோய்க்கான அறிகுறிகள் கூட இருக்கலாம் .ஒரு சிலருக்கு நீல நிறத்தில் உதடுகள் காணப்படும் இது உடலில் ஆக்சிஜன் குறைவாக இருப்பதை குறிக்கிறது.
இதனால் இருதய கோளாறு மற்றும் நுரையீரல் கோளாறு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சிறந்த மருத்துவ ஆலோசனை மேற்கொள்வது சிறந்தது.
உதடு கருமை நிறத்திற்கு பெண்கள் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கும் ஒரு காரணமாகிறது. மார்க்கெட்டுகளில் விலை மலிவாக கிடைக்கக்கூடிய லிப்ஸ்டிக்குகளை தினமும் உபயோகிக்கும் போது கருமையாக மாறும் .இதில் அதிக அளவு கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கும். உங்கள் உதடு ஆரம்பத்தில் கலர் இருந்திருக்கும் தற்போது வேறு நேரத்திற்கு மாறி இருக்கும்.
தேனுடன் சர்க்கரை கலந்து உதடுகளை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மசாஜ் செய்ய வேண்டும் இவ்வாறு செய்யும்போது உதடுகளுக்கு ரத்த ஓட்டம் நன்றாக செல்லும். இவ்வாறு ஒரு நிமிடம் மெதுவாக மசாஜ் செய்து பிறகு கழுவி விட வேண்டும்.
இரவு தூங்கும் போது தேங்காய் எண்ணெய் கொண்டு லேசாக மசாஜ் செய்து விட்டு தூங்கி விடவும். அதேபோல் பகலில் பீட்ரூட்டை சாறு எடுத்து அந்த சாரை ஒரு நிமிடம் உதடுகளில் மசாஜ் செய்து விட்டு 20 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு கழுவி விட வேண்டும்.இவ்வாறு தினமும் மூன்று மாதங்கள் செய்து வர வேண்டும்.
அது மட்டுமல்லாமல் அன்றாட உணவில் தக்காளி, மாதுளை பழம், தர்பூசணி, வால்நட், பாதாம் பருப்பு, பீட்ரூட் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நீங்கள் முறையாக பின்பற்றும் போது சில மாதங்களிலேயே உங்கள் உதடு பிங்க் நிறமாக மாறிவிடும்.
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…