என்னது.. அதிகமா கோவப்பட்டால் முகச்சுருக்கம் ஏற்படுமா?..

wrinkle

Wrinkles-இளம் வயதிலேயே ஏற்படும் முதுமை தோற்றத்திற்கான காரணமும், அதற்கான தீர்வையும் இப்பதிவில் காண்போம்.

நாம் ஒருவரின் வயதை கணக்கிட வேண்டுமானால் அவரின் சருமத்தின் தோலை வைத்து தான் கூறுவோம். அந்த அளவுக்கு சருமம் பார்ப்போரை கவனிக்கத் தூண்டும். ஆனால் தற்போது உள்ள தலைமுறையினர் இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை பெற்றிருக்கின்றனர் இதற்கான காரணத்தை பார்ப்போம்.

காரணங்கள்:

புகைப்பிடித்தல் ,மது அருந்துதல், இரவில் தாமதமாக உறங்குதல், மன அழுத்தம், குடும்ப பொறுப்புகள், மரபணு. இதில் மிக முக்கியமானது அடிக்கடி கோபப்படுதல். ஏனென்றால் நாம் கோபப்படும்போது முக பாவனைகள் மாறும்.

குறிப்பாக நெற்றி சுருங்குதல், கண்ணை சுரக்கும் போது கோடு விழுவது இதனால் அடிக்கடி கோவப்படும் போது அந்த இடம் அதிகமாக சுருங்கிவிடும்.

நம் சருமத்தில் கொலாஜின் மற்றும் எலாஸ்டின்  என இரு புராத உள்ளது. இந்த கொலாஜின் சதை இறுக்கமாகவும் உறுதியாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. எலாஸ்டின்  தசைகளை சுருங்கி விரியும் தன்மையை கொடுக்கிறது,இவற்றின்  உற்பத்தி குறையும் போதும் தோல் சுருக்கம் ஏற்படுகிறது.

முகச்சுருக்கம் நீங்க குறிப்புகள்:

முதலில் முகத்திற்கு சோப்பு பயன்படுத்துவதை தவிர்த்து ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவிக்கொள்ளவும். பிறகு ஓட்ஸ் பவுடர்2ஸ்பூன் , தேன்1 ஸ்பூன்  ,தயிர் மற்றும் சோம்புத்தூள் அரை ஸ்பூன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் விட்டு கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் ஒரு நாள் செய்து வரவும். ஓட்ஸ் சருமத்தில் உள்ள பிஹெச் லெவலை பராமரிக்கிறது. சோம்பு சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும்.

முட்டையின் வெள்ளை கருவை தினமும் முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவி வரவும் இவ்வாறு செய்தால் முகச்சுருக்கம் விரைவில் நீங்கும்.

கற்றாழை ஜெல்லை  இரவில் தடவி வர சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்துக் கொள்வதுடன் சரும கொலாஜினை  உற்பத்தி செய்து முகச்சுருக்கம் ஏற்படுவதை தடுக்கும்.

நாம் ஏதேனும் ஃபேஸ் பேக் பயன்படுத்தும் போது தேன், பாதாம்ஆயில், கற்றாழை ஜெல், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும். இவை முகச் சுருக்கத்தை நீக்கும் தன்மை கொண்ட பொருள்கள் ஆகும்.

நமது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் இருக்க விட்டமின் சி, விட்டமின் இ, கொலாஜின், எலாஸ்டின்  சத்துக்கள் மிக அவசியம்.

முகச்சுருக்கம் ஏற்படுவதை தடுக்கும் உணவு முறை:

நம் முகத்திற்கு ஃபேஸ் பேக் போடுவதோடு மட்டுமல்லாமல் சில உணவுகளையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முட்டை, பாதாம் பருப்பு ,வேர்க்கடலை, ஆட்டு எலும்பு, கீரை வகைகள் ,சிவப்பு இறைச்சி ,மீன் ,காளான், கற்றாழை, மாட்டிறைச்சி,நெய்  மற்றும் விட்டமின் சி அதிகம் நிறைந்த பெர்ரிஸ் ,நெல்லிக்காய், ஆரஞ்சு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும் .

அது மட்டுமல்லாமல் வாரத்தில் இரண்டு நாட்கள் தேங்காய் எண்ணெயை கொண்டு முகத்தை மசாஜ் செய்து பராமரிக்கவும்.

நம் வயதை குறைவாக காட்டிக்கொள்ள யாருக்குத்தான் பிடிக்காது. அப்போ இந்தக் குறிப்புகளை தினமும் பின்பற்றி உங்களுக்கு  வயதாவதை  தள்ளி போடுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்