என்னது.. இட்லியை வைத்து மஞ்சூரியன் கூட செய்யலாமா?.
இட்லி மஞ்சூரியன் -இட்லியை வைத்து மஞ்சுரியன் செய்வது எப்படி என இப்பதிவில் காண்போம்.
தேவையான பொருள்கள்:
- இட்லி =6
- குடமிளகாய் =1-2
- பெரிய வெங்காயம் =2
- பச்சைமிளகாய் =4
- பூண்டு =8 பள்ளு
- கொத்தமல்லி இலை =சிறிதளவு
- சிகப்பு மிளகாய் சாஸ் =2 ஸ்பூன்
- சோயா சாஸ் =1/2 ஸ்பூன்
- தக்காளி சாஸ் =2 ஸ்பூன்
- எண்ணெய்=தேவைக்கேற்ப
- சோளமாவு =1/2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் இட்லியை சிறிது சிறிதாக க்யூப் வடிவத்தில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் கியூப் வடிவத்தில் நறுக்கி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் இட்லியை பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக பொறித்து எடுக்கவும் .
மற்றொரு பாத்திரத்தில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பூண்டை பொன்னிறமாக வறுக்கவும் .பிறகு பச்சை மிளகாய் ,வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு குடை மிளகாயையும் சேர்த்து கிளறி விடவும். அதிக நேரம் குடைமிளகாயை வதக்க கூடாது. குடைமிளகாயுடன் தக்காளி சாஸ் , சிகப்பு மிளகாய் சாஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும் ,இப்போது சோயா சாஸ் அரை ஸ்பூன் சேர்க்க வேண்டும். பிறகு அரை ஸ்பூன் கான்பிளவர் மாவை தண்ணீரில் கலந்து சேர்த்து கிளறி விடவும். கடைசியாக கொத்தமல்லி இலைகளையும் இட்லியையும் சேர்த்து மசாலா நன்கு இட்லியில் படும் வரை சிறிது நேரம் கிளறிவிட்டு இறக்கினால் இட்லி மஞ்சூரியன் தயாராகிவிடும்.
எப்போதும் இட்லி சட்னி, சாம்பார் என சாப்பிடுவதைவிட இதுபோல் மஞ்சூரியன் போல் செய்து சாப்பிடலாம் அல்லது மீதமான இட்லியை வைத்து உப்புமா செய்வதை விட இதுபோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.