என்னது..! பருப்பு இல்லாம சாம்பார் வைக்கலாமா..? அது எப்படிங்க..?
நம் அனைவரின் வீடுகளிலேயும் பெரும்பாலும் சாம்பார் வைப்பது வழக்கம். அந்த சாம்பாரில் பருப்பு என்பது முக்கியமான இடத்தை பிடிக்கிறது. பொதுவாகவே, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை சேர்த்து சாம்பார் செய்வது வழக்கம். தற்போது இந்த பதிவில், பருப்பு இல்லாமல் சாம்பார் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானவை
- தக்காளி – 3
- சின்ன வெங்காயம் – 12
- கருவேப்பிலை
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- மிளகாய்தூள் – சிறிதளவு
- கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
- கடலை மாவு – ஒரு கைப்பிடி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தக்காளியை போட்டு அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை தனியாக எடுத்து தோலுரித்து, மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கிண்ணத்தில் கடலைமாவை போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய்கடுகு , உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சிறிதளவு பெருங்காயத்தூள், உப்பு, சின்னவெங்காயம் நறுக்கியது ஆகியவற்றை போட்டு, நன்கு தாளித்து பின், அதனுள் மஞ்சள் தூள், மிளகாய் தூள் அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும். பின் அதன் மேல் கொத்தமல்லி தலையை தூவி இறக்க வேண்டும்.