என்னது.. சப்போட்டாவை வைத்து ஐஸ்கிரீம் செய்யலாமா?
Ice cream-ஐஸ்கிரீம் செய்வதற்கு எந்த ஒரு எஸ்சென்ஸும் இல்லாமல் சப்போட்டாவை வைத்து ஐஸ்கிரீம் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
- சப்போட்டா =4
- பால் பவுடர் =2 ஸ்பூன்
- குளிர்ந்த பால் =கால் கப் அல்லது பிரஷ் கிரீம்
- பால் =கால் கப்
- சர்க்கரை =கால் கப்
செய்முறை :
முதலில் கால் கப் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும் .பிறகு அதை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக ஆக்கும் போது அதன் மீது ஆடை படியும் ,இந்த நிலையில் வைக்கவும். பிறகு நான்கு சப்போட்டா பழத்தை தோல் மற்றும் விதைகளை நீக்கி மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளவும்.
அதற்கு பின் அந்த சப்போட்டா பழத்துடன் பால் பவுடர் சேர்த்து குளிர்ந்த பால், காய்ச்சிய பால் மற்றும் சர்க்கரை ஆகியவற்றையும் சேர்த்து நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் .
பின்பு இதை ஒரு காற்று புகாத டப்பாவில் சேகரித்து எட்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் பிரிட்ஜில் வைக்கவும். எட்டு மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான சப்போட்டா ஐஸ்கிரீம் ரெடி.