HMPV வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் என்ன?
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை :HMPV-ஹியூமன் மெடா நியூமோ வைரஸ் என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் 200 முதல் 400 ஆண்டுகளுக்கு முன் பறவைகளில் தோன்றியதாகவும் அதன் பிறகு சூழலுக்கு ஏற்ப இந்த வைரஸ் தன்னை தகவமைத்து கொண்டதாகவும் தற்போது இது பறவைகளை பாதிப்பதில்லை என்றும் சையின்ஸ் டைரக்ட் என்ற மருத்துவ கட்டுரைகளுக்கான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு இந்த வைரஸ் மனிதர்களை பாதிக்கும் என்று அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த தொற்று சீனாவில் பரவத் துவங்கியது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 14 வயது குழந்தைகள்தான் அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸ் இருமல், தும்மல், சளி துளிகள் மூலம் நோய் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் ,கை கொடுப்பது, ஒருவருக்கொருவர் தொடுதல் மூலமும் வைரஸ் பரவுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
HMPV வைரஸ் யாரை அதிகம் பாதிக்கும்?
இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக காய்ச்சல் ,இருமல், சுவாச பிரச்சனை, சளி, மூக்கடைப்பு போன்றவைகளும் நோய் பாதிப்பு அதிகரித்தால் மூச்சுக்குழாய் அலர்ஜி மற்றும் நிமோனியா பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த வைரஸ் மூன்று முதல் ஆறு நாட்கள் உயிருடன் இருக்கும் .தொற்றின் வீரியத்தை பொறுத்து நோய் பாதிப்பு இருக்கும் .தற்போது பெங்களூரில் மூன்று மாத குழந்தை இந்த HMPV வைரசால் பாதிப்புக்கு உள்ளானதாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் இவர்கள் தற்போது உடல் நலம் குணமானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது புதிய வைரஸ் இல்லை எனக் கூறுகிறார் டெல்லி கங்காராம் மருத்துவமனையின் குழந்தை பிரிவு தலைவர் மருத்துவர் சுரேஷ் குப்தா. மேலும் இருமல் சளிக்கு கொடுக்கப்படும் மருந்துகள் இந்த பாதிப்புக்கும் பரிந்துரைப்பதாகவும் கூறுகின்றார். இது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றும் குறிப்பாக கொரோனா அளவிற்கு பாதிக்காது எனவும் அதனால் அச்சமடைய வேண்டாம் என்றும் அவர் கூறுகின்றார்.
HMPV வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ளும் முறைகள்;
இருமல் ,தும்மல் வரும்போது வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். அதேபோல் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், நோய் பாதிப்பு உள்ளவர்கள் பொது இடங்களுக்கு சொல்வதை தவிர்க்க வேண்டும், ஒருமுறை பயன்படுத்திய கர்சிப் மற்றும் துண்டை துவைத்து பிறகு பயன்படுத்த வேண்டும். மேலும் ஒருவர் பயன்படுத்தியதை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பொது இடத்தில் எச்சில் துப்புதல் கூடாது, முடிந்தவரை மாஸ்க் அணிந்து கொள்வதே இந்தத் தொற்று தொற்றாமல் இருக்க வழிமுறைகள் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025
நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!
February 27, 2025