மாரடைப்பு வருவதற்கான முன் அறிகுறிகள் என்ன? முறையாக CPR கொடுப்பது எப்படி?

மாரடைப்புக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி சிகிச்சையை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

CPR-HEART (1)

சென்னை –மாரடைப்புக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி சிகிச்சையை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

மாரடைப்பின் அறிகுறிகள்;

மாரடைப்பின் முக்கிய அறிகுறி நெஞ்சு வலி ஆகும். இது மார்பு பகுதியை இறுக்கி பிடிப்பது போன்ற உணர்வு இருக்கும் .இந்த சமயத்தில்  தோள்பட்டை, கழுத்துப் பகுதி ,வயிற்றுப் பகுதி போன்றவற்றிற்கும் வலி உணர்வு பரவுவது போல் இருந்தால் அது தீவிர இருதய பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகள் என இருதய மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

மேலும் காற்றோட்டம் இருந்தும் அதிகமாக வியர்ப்பது, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது போன்ற அறிகுறிகளும் மாரடைப்புக்கான அறிகுறிகள் ஆகும். சில நேரங்களில் எந்தவித அறிகுறிகள் இல்லாமலும் மாரடைப்பு  ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மாரடைப்பு வருவதை  தடுப்பது எப்படி?

சர்க்கரை நோயாளிகள் தங்களின் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

ரத்த கொதிப்பு உள்ளவர்கள் ரத்த அழுத்தத்தை சமநிலையோடு வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் எடையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு வைத்துக் கொள்வதும், உடலில் கொழுப்பின் அளவை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்லாமல் புகைப்பிடித்தல் ,மது அருந்துதல் போன்ற பழக்கவழக்கங்களை தவிர்க்க வேண்டும். மேலும் தற்போது ட்ரென்ட் ஆகி வரும் மிட் நைட் உணவு உட்கொள்ளும் பழக்கத்தை தவிர்த்து  கொள்ள வேண்டும்.

மேலும்  கோபம், பதட்டம் போன்ற மனம் சார்ந்த பிரச்சனைகளை குறைத்துக் கொண்டு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.

மாரடைப்பு ஏற்பட்டால் CPR செய்வது எப்படி?

CPR [உயிர் மீட்பு சுவாசம் ] மருத்துவ உதவி கிடைக்கும் வரை  பாதிக்கப்பட்டவரின்   ரத்த ஓட்டம் மற்றும் சுவாசத்தை மீட்டெடுக்க இந்த சிபிஆர் முதலுதவி செய்ய படுகிறது. இதனால் மூளையின் செயல்பாட்டை பாதுகாக்கப்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

CPR செய்யும் முறை;

முதலில் பாதிக்கப்பட்ட நபரை சத்தமாக அழைக்க வேண்டும். அவர் விழிக்கவில்லை என்றால் ஆம்புலன்ஸ்  சர்வீஸுக்கு கால் செய்ய வேண்டும். பிறகு அவரின் சுவாசத்தை சரி பார்க்க வேண்டும்.

சுவாசம் இருந்தால் ஆம்புலன்ஸ்காக காத்திருக்கலாம். ஒருவேளை சுவாசம் இல்லை என்றால் சற்றும் தாமதிக்காமல் அவருக்கு முதலுதவியை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

உங்களது இரண்டு கைகளையும் ஒன்றின் மீது ஒன்றாக வைத்து  பாதிக்கப்பட்டவரின்  மார்பு பகுதியில்  30 எண்ணிக்கையில் அழுத்தம் கொடுக்க வேண்டும். பிறகு சுவாசம்  வந்துவிட்டதா என பார்க்க வேண்டும் அப்படி வரவில்லை என்றால் வாய் வழியாக இரண்டு முறை சுவாசம் கொடுக்க வேண்டும்.

இந்த பயிற்சியை முறையாக செய்வதன் மூலம் நோயாளி உயிர் பிழைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே ஓர் உயிரை காப்பாற்றும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் இந்த சிபிஆர் சிகிச்சையை  முறையாக செய்து அவரைக் காப்பாற்றலாம்.

மேலும் தங்கள் உடலில் அக்கறை உள்ளவர்கள் கட்டாயம் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஏனென்றால் அப்போதுதான் நம்மை அறியாமல் பாதித்திருக்கும் நோய் தாக்கத்தை அறிந்து ஆரம்ப நிலையிலே சிகிச்சை மேற்கொண்டு  அபாயத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்