லைஃப்ஸ்டைல்

Weight Loss : அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே..! இந்த பழம் உடல் எடையை குறைக்குமா..?

Published by
லீனா

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று சீத்தாப்பழம். இந்த பழத்தில் பீட்டா-கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எடை இழப்பை ஆதரிக்கவும் உதவுகின்றன.

சீத்தாப்பழம் குறைந்த கலோரி மற்றும் உயர் நார்ச்சத்து கொண்டது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் பசி உணர்வை நீடிப்பதற்கும், அதிக கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதற்கும் உதவுகிறது. சீத்தாப்பழம் உடல் எடையை குறைக்க உதவும் என்றாலும், அது மட்டும் ஒருபோதும் போதுமானதாக இருக்காது. உடல் எடையை குறைக்க, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும், போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

மேலும் இது கொலெஸ்ட்ரால் அளவுகளை சீராக்கும், இதில் இருக்க கூடிய நியாசின் மற்றும் டயட்ரின் நார்சத்து கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும். அதிக கொலெஸ்ட்ரால்  பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இதை சாப்பிட்டு வர கொலெஸ்ட்ரால்  அளவு கட்டுக்குள் வரும். 

அதே சமயம் சீத்தாப்பழத்தில், பல வகையான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இந்த பழம் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.  இது உடலுக்கு அதிக குளிர்ச்சியை தரக்கூடிய  ஒரு பழம். இதனால் கருச்சிதைவு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும். அதோடு சிசுவின் வளர்ச்சிக்கும் உதவக்கூடியது. சிசுவின் மூளை வளர்ச்சி, நரம்பு மண்டல அமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.

சீத்தாப்பழத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான மெக்னீசியம்  இதய சுவர்களை வலுப்படுத்தும், அதோடு இருதயம் சீராக சுருங்கி  விரிவதற்கு உதவி செய்வதோடு மாரடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது. சீத்தாப்பழத்தில் இருக்கக்கூடிய தாமிரம், டயட்ரின்  போன்ற நார்ச்சத்துக்கள் குடலின் இயக்கத்தை சீராக இயக்கி நன்கு செரிமானம் ஆகுவதற்கு உதவி செய்யும். அதோடு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் தடுக்கப்படும். 

கடைகளில் நாம்  உடல் ஆரோக்கியத்தை கெடுக்க கூடிய உணவுகளை வாங்கி சாப்பிடுவதைவிட, இப்படிப்பட்ட பழங்களை வாங்கி சாப்பிடுவது நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

Published by
லீனா

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

12 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

12 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

12 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

12 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

13 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

13 hours ago