கல்யாண வீட்டு ஸ்பெஷல்..மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?.

கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  பார்க்கலாம்.

mocha payiru gravy (1)

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்;

  • மொச்சை பயறு =150 கிராம்
  • கத்திரிக்காய்= 6
  • சின்ன வெங்காயம்= 15
  • பூண்டு= 4
  • தேங்காய்= கால் கப்
  • தக்காளி= ஒன்று
  • எண்ணெய் =5 ஸ்பூன்
  • சீரகம்= கால் ஸ்பூன்
  • சோம்பு= ஒரு ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் =ஒரு ஸ்பூன்
  • சாம்பார் தூள் =இரண்டு ஸ்பூன்
  • மல்லித்தூள்= ஒரு ஸ்பூன்
  • மஞ்சள் தூள்= கால் ஸ்பூன்.

brinjal (1)

செய்முறை;

மொச்சை பயிரை 8 மணி நேரம் ஊற வைத்து பிறகு குக்கரில் 6-7  விசில் விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை அரைத்து வைத்துக் கொள்ளவும் .இப்போது ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து அதில் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து கலந்து விடவும் .பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கி  விட்டு கத்தரிக்காயை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் .

coconut (11) (1)

அதனுடன் வேக வைத்த மொச்சை பயிறு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சாம்பார் தூள் ,தேவையான அளவு உப்பு சேர்த்து கத்தரிக்காயை வேக வைத்துக் கொள்ளவும். மற்றொருபுறம் தேங்காயுடன், சோம்பு சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது கத்தரிக்காய் வெந்த பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து எண்ணெய்  பிரிந்து வரும் வரை வேகவைத்து கிளறி விட்டு  இறக்கினால் சுவையான மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி தயாராகிவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்