பீட்ரூட் பேஸ் மாஸ்க் மூலம் முகத்தை பொலிவுற செய்வது எப்படி?
இன்று இளம் பெண்கள் தங்களது முகத்தை பொலிவாக்குவதற்காக பல்வேறு கிரீம் வகைகளை பயன்படுத்துகின்றனர். இதில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சில கெமிக்கல்கள் உள்ளதால் பக்க விளைவுகளையும் சந்திக்க நேரிடுகிறது.
தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் பக்க விளைவுகள் இல்லாத முறையில் முகத்தை பளபளவென வைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். அந்த வகையில் இந்த பதிவில் பீட்ரூட் பேஸ் மாஸ்க் மூலம் முகத்தை பொலிவாக வைப்பது எப்படி என்பது பற்றியும் அதனை செய்யும் முறை பற்றியும் பார்ப்போம்.
இந்த பேஸ் மாஸ்க்கே செய்வதற்கு பீட்ரூட் பவுடர் மற்றும் ஜெலட்டின் பவுடர் ஆகிய இரண்டு பொருட்கள் தேவைப்படும். பீட்ரூட் பவுடர் செய்யும் முறை என்னவென்றால் முதலில் பீட்ரூட்டை நன்கு காய வைத்து பவுடர் ஆக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஜெலட்டின் பவுடர் கடைகளில் கிடைக்கும்.
செய்முறை
ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் பீட்ரூட் பவுடர் மற்றும் ஒரு ஸ்பூன் ஜெலட்டின் பவுடரை எடுத்து சூடான தண்ணீர் அல்லது பால் ஊற்றி பேஸ்ட் போல கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை கண்கள் மற்றும் உதடுகள் தவிர எல்லா இடங்களிலும் சமமாக தடவ வேண்டும். பின் நன்கு காய்ந்ததும் அது அப்படியே உறிந்து வந்து விடும். அதுவரை பொறுமையாக உலர விட வேண்டும்.
இதனை முகத்தில் பூசுவதன் மூலம் கரும்புள்ளிகள், மாசு, கருந்திட்டுகள், பருக்கள் போன்றவை நீங்குவதோடு முகமும் பளபளவென காணப்படும்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…