உங்கள் முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா..? அப்ப இதை ட்ரை பண்ணி பாருங்க..!

Default Image

பீட்ரூட் பேஸ் மாஸ்க் மூலம் முகத்தை பொலிவுற செய்வது எப்படி?

இன்று இளம் பெண்கள் தங்களது முகத்தை பொலிவாக்குவதற்காக பல்வேறு கிரீம் வகைகளை பயன்படுத்துகின்றனர். இதில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சில கெமிக்கல்கள் உள்ளதால் பக்க விளைவுகளையும் சந்திக்க நேரிடுகிறது.

தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் பக்க விளைவுகள் இல்லாத முறையில் முகத்தை பளபளவென வைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். அந்த வகையில் இந்த பதிவில் பீட்ரூட் பேஸ் மாஸ்க் மூலம் முகத்தை பொலிவாக வைப்பது எப்படி என்பது பற்றியும் அதனை செய்யும் முறை பற்றியும் பார்ப்போம்.

இந்த பேஸ் மாஸ்க்கே செய்வதற்கு பீட்ரூட் பவுடர் மற்றும் ஜெலட்டின் பவுடர் ஆகிய இரண்டு பொருட்கள் தேவைப்படும். பீட்ரூட் பவுடர் செய்யும் முறை என்னவென்றால் முதலில் பீட்ரூட்டை நன்கு காய வைத்து பவுடர் ஆக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஜெலட்டின் பவுடர் கடைகளில் கிடைக்கும்.

செய்முறை

Beauty Secrets in Beetroot

ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் பீட்ரூட் பவுடர் மற்றும் ஒரு ஸ்பூன் ஜெலட்டின் பவுடரை எடுத்து சூடான தண்ணீர் அல்லது பால் ஊற்றி பேஸ்ட் போல கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  இந்த பேஸ்ட்டை கண்கள் மற்றும் உதடுகள் தவிர எல்லா இடங்களிலும் சமமாக தடவ வேண்டும். பின் நன்கு காய்ந்ததும் அது அப்படியே உறிந்து வந்து விடும். அதுவரை பொறுமையாக உலர விட வேண்டும்.

இதனை முகத்தில் பூசுவதன் மூலம் கரும்புள்ளிகள், மாசு,  கருந்திட்டுகள், பருக்கள் போன்றவை நீங்குவதோடு முகமும் பளபளவென காணப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்