உடல் எடையை குறைக்கணுமா..? வாரத்திற்கு ஒரு நாள் இந்த சூப் குடிச்சா போதுங்க..!
நமது முன்னோர்கள் இயற்கையாக விளையக்கூடிய உணவுகளை கொண்டு, வீட்டிலேயே உணவு தயாரித்து சாப்பிட்டு வாழ்ந்தனர். அவர்களது ஆயுட்காலமும் கெட்டியாக இருந்ததோடு, நோய் நொடியின்றி வாழ்ந்தனர். ஆனால், இன்று உணவுப்பழக்கவழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் ஃபாஸ்ட்புட் உணவுகளை தான் விரும்பி உட்கொள்கின்றனர்.
இதனால் இன்று பெரும்பாலானோர், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு போன்ற பல வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அந்த வகையில் நமக்கு ஏற்படக் கூடிய உடல் ரீதியான பிரச்னைகளுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண முயல்வது நல்லது.
புராக்கோலி சூப்
புராக்கோலியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகின்றன. புராக்கோலியில் உடல் ஆரோக்கியத்தை மேம்படும் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது.
புராக்கோலி சூப்பை தினமும் குடித்து வந்தால் உடல் எடை பிரச்சினை உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள், இதயம் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது எனவே இந்த சூப்பை வாரத்திற்கு ஒரு நாள் பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தற்போது இந்த பதிவில், புராக்கோலியை வைத்து சூப் செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம் .
தேவையானவை
- கடலை எண்ணெய் – 2 ஸ்பூண்
- சீரகம் – கால் ஸ்பூன்
- வெள்ளை பூண்டு – 3 பல்
- தக்காளி – 1
- பெரிய வெங்காயம் – 1
- புராக்கோலி – 300 கிராம்
- உப்பு – தேவையான அளவு
- பிரியாணி இலை – 1
- மிளகு தூள் – கால் ஸ்பூன்
செய்முறை
முதலில் நமக்கு தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் புராக்கோலியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கரண்டி கடலை எண்ணெய் ஊற்றி, அதில் சீரகம், வெள்ளை பூண்டு, தக்காளி, பெரிய வெங்காயம் சிறிதளவு உப்பு போட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனுள் நறுக்கி வைத்துள்ள புராக்கோலியை போட்டு இரண்டரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். அதன் பின் அதனை எடுத்து ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் மீண்டும் ஒரு பாத்திரத்தில் ஒரு கரண்டி கடலை எண்ணெய் ஊற்றி, ஒரு பிரியாணி இலையை போட்டு, அரைத்து வைத்துள்ள இந்த கலவை அதனுள் ஊற்றி சிறிதளவு மிளகுத்தூள் தூவி நன்கு கிளறிக் கொள்ளவேண்டும். பின் அதனை ஒரு டம்ளரில் ஊற்றி பரிமாறினால் சுவையாக இருக்கும்.