உங்கள் ஸ்கின் டைப் என்னன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்போ இந்த பதிவை படிங்க.!

type of skin

சருமம் வகைகள்  -நம்மில் பலரும் நம்முடைய ஸ்கின் டைப் என்னவென்று தெரியாமலே பல கிரீம்களை பயன்படுத்துவோம். இப்படி பயன்படுத்தினால் எந்த ஒரு மாற்றமும் நமது சருமதிற்கு  கிடைக்காது, அதனால் வீட்டிலேயே நம் சருமம் எந்த வகையைச் சேர்ந்தது என தெரிந்து கொள்வோம்.

ஐந்து வகையான சரும வகைகள் உள்ளது.

  • ஆயில் சருமம்
  • வறண்ட சருமம்
  • நார்மல் ஸ்கின்
  • காம்பினேஷன் ஸ்கின்
  • சென்ஸ்டிவ் ஸ்கின்

ஆயில் சருமம்:

நம் இரவு தூங்கும் முன் முகத்தை கழுவி விட்டு தூங்க வேண்டும் . பின் காலையில் நம் முகத்தை பார்க்கும் போது நெற்றிப் பகுதி ,மூக்கு ,கன்னம் போன்றவை எண்ணெய் பசை போன்று இருந்தால் அது ஆயில் ஸ்கின்  ஆகும்.நம் உடலில் அதிகமாக எண்ணெய் சுரப்பதால் சருமம் எண்ணெய் பசையாக இருக்கும் .

நார்மல் ஸ்கின்:

நெற்றி பகுதி மட்டும் எண்ணெய் பசையோடு இருந்து கண்ணம் வறண்டு இருந்தால் நார்மல் ஸ்கின் ஆகும்.நம் உடல் போதுமான அளவு எண்ணெயை சுரக்கிறது .

வறண்ட சருமம்:

சருமம் முழுவதும் மிக வறட்சியாக காணப்படுவது, கீறல் போன்ற இருப்பது வறண்ட சருமம் ஆகும்.உடலில் நீர் சத்து குறைவாக இருத்தல் மற்றும் தேவைக்கு குறைவாக எண்ணெய்  சுரப்பதால் தோன்றும் .

காம்பினேஷன் ஸ்கின்:

நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் எண்ணெய் பசை இருக்கும். கண்ணம் நார்மலாக இருக்கும் இது காம்பினேஷன் ஸ்கின் வகையைச் சேர்ந்தது.

சென்சிடிவ் ஸ்கின்:

காலை எழுந்தவுடன் முகத்தை கழுவி விட்டு ஏதேனும் ஒரு கிரீமை தடவினால் ஆங்காங்கே அரிப்பு ஏற்படும் இது சென்சிடிவ் ஸ்கின் வகையைச் சார்ந்தது.

ஆகவே உங்கள் சருமம் என்னவென்று தெரிந்துகொண்டு அதற்கேற்ற கிரீம் வகைகளை பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்