குளிர்காலத்தில் சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்.
பொதுவாகவே குளிர்காலத்தில் பெரும்பாலானோருக்கு சரும பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு போதுமானதாக இருக்காது. நாம் உண்ணக்கூடிய உணவுகளும் ஊட்டச்சத்தான உணவுகளாய் சருமத்துக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தக் கூடிய உணவுகளாய் இருக்க வேண்டும்.
பொதுவாகவே சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு உள்ளது. தினமும் உணவில் அதிக அளவில் காய்கறிகள் பழங்களை சேர்த்துக் கொள்வது அவசியம். குளிருக்கு இதமாக இருக்கும் என்று அதிக நேரம் நெருப்புக்கு அருகில் உடலை இருப்பது சருமத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்த சமயங்களில் சோப்புக்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்துவது நல்லது. தோல் வறட்சி, தோல் வெடிப்பு போன்றவற்றை தவிர்க்க குளிக்க செல்வதற்கு முன்பதாக சிறிது நேரத்திற்கு முன் தேங்காய் எண்ணையை உடலில் தேய்க்கலாம். மேலும் குளிக்க பயன்படும் நீரில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து குளிப்பதால் குளிப்பதால் ஏற்படக்கூடிய ஈரப்பதம் இழப்பு, எண்ணெய் பசை இழப்பை ஈடு செய்ய உதவும்.
மேலும் உதடு வெடிப்பை பிரச்சனையிலிருந்து விடுபட எண்ணெய் அல்லது வெண்ணையை உதட்டில் தடவலாம். இதன் மூலம் வெடிப்பு குணமாகுவதுடன் உதடு மென்மையாக இருக்கும். தோல் வறட்சி உள்ளவர்கள் அடிக்கடி நீரில் உணவை உடலை கழுவ கூடாது. மாறாக குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக கடலை மாவை தேய்த்து கழுவலாம்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…