விடாத காய்ச்சலை விரட்டும் விஷ்ணுகிரந்தி.. [காய்ச்சல் முதல் விந்தணு உற்பத்தி வரை]..
காய்ச்சலை குணப்படுத்த பாராசிட்டமல் வகை மாத்திரைகள் எப்படி பலன் தருகிறதோ அதே பலன்களை விஷ்ணுகிராந்தி மூலிகையும் கொடுக்கிறது
சென்னை –காய்ச்சலை குணப்படுத்த பாராசிட்டமல் வகை மாத்திரைகள் எப்படி பலன் தருகிறதோ அதே பலன்களை விஷ்ணுகிராந்தி மூலிகையும் கொடுக்கிறது என டாக்டர் செங்கோட்டையன் தனது யூட்யூப் பக்கத்தில் விளக்கியுள்ளார் .
காய்ச்சல் என்றதும் நம் அனைவரும் பாராசிட்டமல் மாத்திரைகளை தான் உட்கொள்வோம். இதை சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே வியர்வை மூலம் வெப்பத்தை வெளியேற்றி காய்ச்சலை குணப்படுத்துகிறது . ஆனால் இதே வேலையை இயற்கையான முறையில் விஷ்ணுகிரந்தி செடிகள் செய்து விடுகிறது என்கிறார்கள் Naturopathy மருத்துவர்கள்.
விஷ்ணுகிரந்தி மூலிகை பயன்படுத்தும் முறை;
கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்ற குடிநீருக்கு இணையாக காய்ச்சலை போக்கக்கூடியது தான் விஷ்ணுகிரந்தி செடி .இது தரையுடன் படர்ந்து வளரக்கூடியதாகும். இதன் பூக்கள் நீல நிறத்தில் காட்சியளிக்கும் .காலையில் மலர்ந்து மதிய வேளையில் பூக்கள் உதிர்ந்து விடுகிறது. இதன் செடி முழுவதுமே மருத்துவ குணம் கொண்டது தான்.
கசாயம் தயாரிக்கும் முறை;
ஒரு செடியின் முழு பாகத்தை கழுவி சிறிதாக நறுக்கி 20 மிளகை சேர்த்து லேசாக இடித்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அரை லிட்டராக வரும் வரை காய்ச்சி கொள்ளவும் .இதை மூன்று வேலையாக பிரித்துக் கொண்டு காலை 150ml மதியம் 150 எம் எல் மாலை 150 எம் எல் வீதம் உணவுக்குப் பின் மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் குடித்து வரலாம்.
இது காய்ச்சல் மட்டுமல்லாமல் குளிர் காய்ச்சல் ,உள் காய்ச்சல் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. இது செடியாக கிடைக்காவிட்டால் நாட்டுமருந்து கடையில் பொடியாகவும் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு ஸ்பூன் பொடியை 300 எம்எல் தண்ணீரில் கொதிக்க வைத்து 150 எம்எல் ஆக வரும் வரை காய்ச்சி பிறகு குடித்துக் கொள்ளலாம்.
இதனை உறுதி செய்யும் வகையில் நாட்டு மருத்துவர் நந்தினி சக்தி சுப்பிரமணி தனது யூட் யூப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த விஷ்ணு கிரந்தி சமூலத்தை மிளகு சேர்க்காமல் இதன் பாகங்களை மட்டும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து அரை டம்ளராக வரும் வரை காய்ச்சி இரவில் எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை குறைப்பதத்தோடு இன உறுப்புகளையும் பலப்படுத்துகிறது.
அது மட்டுமல்லாமல் நரம்பு பிரச்சனை, மன அழுத்தம் போன்றவற்றையும் குணப்படுத்தி நல்ல உறக்கத்தை தரக்கூடியதாகவும் உள்ளது. உள்ளங்கை உள்ளங்கால் எரிச்சல் போன்றவையும் குணமாகிறது. விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கிறது ,கருமுட்டையின் வளர்ச்சியையும் அதிகப்படுத்துகிறது.
எனவே காய்ச்சல் சமயத்தில் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை காட்டிலும் இயற்கை முறையில் எளிதில் நமக்கு கிடைக்கும் மூலிகைகளை கசாயம் செய்து குடித்து வந்தால் நமக்கு ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு இணை நோய்கள் வருவதும் தடுக்க படுகிறது .காய்ச்சலுடன் வேறு அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும் .